Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Saturday, June 30, 2012

என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு

ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு!!
நம் அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு!!
பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூட பேரழகு!!
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு!!
With love Edmon..

" உன் பெயரை நானும் எழுதுவது இல்லை "

காற்று வழிபோவதை நாற்று சொல்கின்றது!!
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது!!
என் கண்ணில் வழிகின்ற கண்ணீர் உன் காதல் சொல்கின்றது!!
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது!!
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது!!
என் பாதி உயிர் போன போதும் என் மீதி வாழ்வுள்ளது!!

 
 
************உண்மை தான் என் அன்பே " உன் பெயரை நானும் எழுதுவது இல்லை " அதே பென் முள் மீண்டும் உன்னை குத்தி விடகூடாது என்பதற்காக******
எழுத்தும் ஆக்கமும்,
With love J.R.Edmon!!

Friday, June 22, 2012

இறைவனிடம் முறையிட்டு என் மனதை திடப்படுத்தி என் காலத்தை நகர்த்துகின்றேன்!!!!

தனிமையை சொந்தமாக்கி
நடிப்பே வாழ்க்கையாகி
நாடித்துடிப்பின்றி நடைப்பிணமாய்
நால்வர் முன் போலியாய் சிரித்து
என் தனிமையிலே கண்ணீர் சிந்தி
என்னை நானே சமாதாப்படுத்தி
இறைவனிடம் முறையிட்டு
என் மனதை திடப்படுத்தி
என் காலத்தை நகர்த்துகின்றேன்
மரண வாசல் திறக்கும் வரை!!!!
&எட்மன்&

Wednesday, June 20, 2012

Nothing to worry



F - Face your life
R - Relief your problem
I - Idea to win
E - Easy to solve
N - Nothing to worry
D - Decide your future
S - Success your partner

Tuesday, June 19, 2012

திருமண வாழ்த்து

We’ve had our ups and downs,
This we both know,
Through it all our love
 Still managed to grow
Different thoughts we had About many things,
But our love for each other,
Had no attached strings.
******Happy Wedding******
" அண்மையில் திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட யூட் & தானியா தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்கள் "
&எட்மன்&

Sunday, June 10, 2012

என் மனசுக்கு மட்டும் விளங்கும் தெளிவான சங்கடம்

என் மொழி
@ என் எண்ணத்தின் விம்பம்.
@ என் மனசுக்கு மட்டும் விளங்கும் தெளிவான சங்கடம்.
@ என் உறவுக்கும்.., என் உரிமைக்கும் இடையில் ஏற்படும் உறவுப்பரிமாற்றம்.
@ என் உணர்வுக்கும்.., என் உறவுக்குமான ஊடகம்.
@ என் உறவை என்னுடன் இணைக்க உதவும் உற்ற நண்பன்.

~ அன்புடன் எட்மன் ~

Saturday, June 9, 2012

நீ யாகம் செய்வதால் இருளில் எனக்கு ஜோகம்




மெழுகுவர்த்தி
* நீ யாகம் செய்வதால் இருளில் எனக்கு ஜோகம்
* என்னவளை நினைத்து.., நினைத்து மெழுகுவர்த்தியாய் உருகி போனேன்
* ஊதியம் கேட்காத காவலன்
* தன்னை வருத்தி பிறரை விருத்தி செய்யும் இந்த வர்த்தி

Sunday, June 3, 2012

சொந்தமடி நீ எனக்கு..

சொல்லத்தான் தெரியவில்லை
என் சொந்தத்தை - சொதித்துப்
பார்க்காதே என் உயிரே வந்துவிடு!!
நீ அள்ளிக்கொடுத்த இன்பம் ஆண்டுகளாலும்
அழியவில்லை - தேடிப்பார்த்த பொழுது
உன் நினைவுகளாலும் சிதையவில்லை!!
நாம் பாடித்திரிந்த பருவம் என் கண்ணீரில்
கரையவில்லை - நம் எண்ணச்சிதறல்களை
விதி மாறிப் போட்டாலும் - என்
கண்ணீரில் உன் உருவம்
களங்கமின்றிச்சிரிக்கின்றது!!!!
அன்புடன் எட்மன்..

Saturday, June 2, 2012

என் ஆயுளில் நீ தொடர்கதையானாய் - அனால் அதில் நானோ சிறுகதையானேன்

என் நினைவில் நீ மாளிகையானாய் - அனால்
அதில் நான் ஏழையானேன்..
என் இதயத்தில் நீ பூவானாய் - அனால்
அதில் நான் சருகானேன்..
என் வாழ்வில் நீ வசந்தமானாய் - அனால்
அதில் நான் சிறகுடைக்கப்பட்ட பறவையானேன்..
என் ஆயுளில் நீ தொடர்கதையானாய் - அனால்
அதில் நானோ சிறுகதையானேன்!!!!

Friday, June 1, 2012

தினமும் எனது பின்னால்.., நீ உட்கார்ந்துவரவேண்டும்.. அந்த வண்டியில்!!!!

 
















Key Chain
நீ தந்த கீ செயினில்..
எனது வண்டியின்
சாவியை கோர்க்கவேண்டுமென்றால்..,
ஒரு நிபந்தனை!!
தினமும் எனது பின்னால்..,
நீ உட்கார்ந்துவரவேண்டும்..
அந்த வண்டியில்!!!!
&எட்மன்&

நீ வாங்கித்தந்த முதல் பரிசு



Purse
எத்தனை ஆயிரம் ரூபாய்
என் பர்சில் இருந்தால் என்ன!!??
நீ வாங்கித்தந்த முதல் பரிசு..,
என்பதில் தான் இருக்கிறது..
அதன் மதிப்பு!!!!
&எட்மன்&