தனிமையை சொந்தமாக்கி
நடிப்பே வாழ்க்கையாகி
நாடித்துடிப்பின்றி நடைப்பிணமாய்
நால்வர் முன் போலியாய் சிரித்து
என் தனிமையிலே கண்ணீர் சிந்தி
என்னை நானே சமாதாப்படுத்தி
இறைவனிடம் முறையிட்டு
என் மனதை திடப்படுத்தி
என் காலத்தை நகர்த்துகின்றேன்
மரண வாசல் திறக்கும் வரை!!!!
&எட்மன்&
No comments:
Post a Comment