Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Saturday, September 29, 2012

உன்னை தேடி வரும் அன்பு ஆழமானது!!!!

நீ 
தேடி போகும் 
அன்பு அழகானதாக இருக்கலாம்.., 
ஆனால்.. 
உன்னை 
தேடி வரும் அன்பு 
ஆழமானது!!!!
உன் உயிரில்..
உன் மனதில்.. 
உன் உணர்வில்.. 
உன் கனவில்.. 
உன் நினைவில்.. 
உன் அன்பில்..
உன் இதயத்தில் யாரும் இருக்கலாம். 
ஆனால்..
உனக்காக யாரும் இல்லாத போது நான் இருப்பன் உன் நண்பனா!!!!
&என்றும் உன் மறவா நட்புடன் எட்மன்&

Thursday, September 27, 2012

நான் உன் கண்களில் இருப்பேன்..

இன்று நீ என்னை பிரிந்தாலும்.., மறந்தாலும்..,
என்றாவது நீ என்னை நினைக்கும் போது..,
நான் உன் கண்களில் இருப்பேன்..
ஒரு துளி கண்ணீராக!!!!
எல்லாமே கிடைக்க வேண்டும் என்று நினைக்காதே..,
சில விசயங்கள் கிடைக்காமல் இருப்பதே ஆண்டவன் கொடுத்த வரம்!!!!
&அன்புடன் எட்மன்&

Sunday, September 23, 2012

என்னவளே!! நீ எப்போது அந்த விஞ்ஞானிகள் கண்ணில் அகப்பட்டாய்..!!??


^^^^^^^^^^
நிலாவா நீ..
^^^^^^^^^^
என்னவளே!!
நீ எப்போது அந்த விஞ்ஞானிகள் கண்ணில் அகப்பட்டாய்..!!??
உன்னை கண்டநாள் முதல்..,
அவர்கள் புதியதோர் நிலாவைக் கண்டுபிடித்து விட்டதாக..,
புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்!!!!
&அன்புடன் எட்மன்& 

Saturday, September 22, 2012

எவ்வாறு எடுத்துரைப்பேன் அவைகளுக்கு...........!!????? நமக்குள் இடைவெளி நிரந்தரமாகிவிட்டது என்று!!!!

நானும் நீயும்,
ஒன்றாக சேர்ந்து
ரசித்த சிற்பங்கள் எல்லாம்..,
உன்னைப்பற்றி கேட்கின்றன..
நீயின்றி நான் தனியாக
நம் ஆலயத்துக்கு செல்லும் போது....!!
எவ்வாறு எடுத்துரைப்பேன் 
அவைகளுக்கு...........!!?????
நமக்குள் இடைவெளி 
நிரந்தரமாகிவிட்டது என்று!!!!
&என்றும் அன்புடன் எட்மன்&

Sunday, September 16, 2012

நம் பார்வைகள், சந்தித்துக்கொள்ளும் புள்ளிகள்.., நட்சத்திரங்களாகின்றன!!!!

நீ என் அருகில் இருந்தால்
எனக்கு கிட்டப்பார்வை..,

நீ என் தொலைவில் இருந்தால்
எனக்கு தூரப்பார்வை!!!!

அங்கிருந்து நீயும்..,
இங்கிருந்து நானும்..,
வானம் பார்க்கும் போது!!

நம் பார்வைகள்,
சந்தித்துக்கொள்ளும் புள்ளிகள்..,
நட்சத்திரங்களாகின்றன!!!!

&என்றும் அன்புடன் எட்மன் ஜெகதீபன்&