Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Sunday, December 30, 2012

உள்ளம் அழுவதை நினைத்து கண்ணீர் துடைப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள்!!!!

அன்பு யார் மீதும் காட்டலாம் - அனால் 
கோபம் உரிமை உள்ளவர் மீது மட்டுமே காட்ட முடியும்..,
கோபம் அன்பை விட உயர்வானது!!!!
உன் முகம் சிரிப்பதை பார்த்து கைகொட்டுபவர்களை விட - உன் உள்ளம் 
அழுவதை நினைத்து கண்ணீர் துடைப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள்!!!!
&அன்புடன் எட்மன்&

வலி உனக்கு மட்டும் இல்லை.., நீ நேசித்த இதயத்திற்கும் தான்

யாரையும் புரிந்து கொண்டு நேசி..,
நேசித்த பின் புரிந்துகொள்ள முயற்சிக்காதே..,
வலி உனக்கு மட்டும் இல்லை..,
நீ நேசித்த இதயத்திற்கும் தான்!!!!
பிரிக்கமுடியாத சொந்தம்..,
மறக்கமுடியாத பந்தம்..,
தவிர்க்க முடியாத உயிர்..,
எல்லாமே நீ மட்டுமே!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Friday, December 28, 2012

உங்கள் நட்பை நேசித்தேன் மறக்கமுடியவில்லை

வானத்தை நேசித்தேன் தொட முடியவில்லை..
கடலை நேசித்தேன் அடைய முடியவில்லை..
காற்றை நேசித்தேன் பிடிக்கமுடியவில்லை..
உங்கள் நட்பை நேசித்தேன் மறக்கமுடியவில்லை!!!!
&அன்புடன் எட்மன்&

Thursday, December 27, 2012

நம்மை நேசிக்கும் உண்மையான இதயம் நமக்காக எப்போதும் காத்திருக்கும்!!!!

மழை பெய்யும் போது உன் இரு கைகளையும் நீட்டி மழை துளிகளை ஏந்திக்கொள்..,
எவ்வுளவு மழை துளைகளை நீ கையில் வைத்திருக்கிறாயோ.., அந்தளவிற்கு நீ என்னை நேசிக்கிறாய்!!
எவ்வுளவு மழை துளிகளை நீ ஏந்தாமல் விடுறியோ.., 
அந்தளவிற்கு நான் உன்னை நேசிக்கிறேன்!!!!
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை - ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம் நமக்காக எப்போதும் காத்திருக்கும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நீ சுவாசிக்கும் காற்றை தான் நானும் சுவாசிக்கிறேன்

உன்னை பார்க்க என் கண்கள் துடிக்குது..,
என் கண்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்??!!
நீ என் இமைகள் என்று!!!!
பார்க்க முடியாத தொலைவில் இருந்தாலும்..,
பேச முடியாத தூரத்தில் இருந்தாலும்..,
நீ சுவாசிக்கும் காற்றை தான் நானும் சுவாசிக்கிறேன்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, December 26, 2012

சிலர் உயிர் வாழ காரணமே நினைவுகள் தான்

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது - ஆனால் 
தண்ணீர் இல்லாமல் தாமரை வாழாது..,
நீயும் நானும் அருகில் இல்லை - ஆனால் 
உன் நினைவு இல்லாமல் நான் இருந்ததில்லை!!!!
நினைவுகளுக்கு உயிர் இல்லை - ஆனால் 
சிலர் உயிர் வாழ காரணமே நினைவுகள் தான்!!!!
&என்றும் உன் நினைவுடன் எட்மன்&

Monday, December 24, 2012

நம்மை விட நம்மை அதிகம் நேசிப்பவர்கள்

நாம் நினைப்பது நடப்பதுமில்லை..
நடப்பது நமக்கு பிடிப்பதுமில்லை - ஆனாலும் வாழ்கின்றோம் ஏன்!!??
நம்மை விட நம்மை அதிகம் நேசிப்பவர்கள் இருப்பதால்!!!!
பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்போம் பிரிவுகளை மட்டுமே..,
நினைவுகளை அல்ல!!!!
&அன்புடன் எட்மன்&

Sunday, December 23, 2012

உன் முகத்தில் சிரிப்பு என்ற பூவை மட்டும் தான் நான் பார்க்கவேண்டும்


ரோஜா தோட்டத்தில் பூக்கள் எப்படி பூத்து குலுங்குகிறதோ..,
அதை போல் உன் முகத்தில் சிரிப்பு என்ற பூவை மட்டும் தான் நான் பார்க்கவேண்டும்!!!!
காதலில் ஒரு நட்பு இருக்கும்.
நட்பில் ஒரு காதல் இருக்கும்.
காதலில் இருக்கும் நட்பு நீடிப்பதில்லை!!
ஆனால்.., நட்பில் இருக்கும் காதல் என்றென்றும் அழிவதில்லை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, December 19, 2012

நட்பு மலரட்டும் நம்மை பார்த்து

பூக்கள் மலரட்டும் உன் புன்னகையை பார்த்து..,
கவிதைகள் மலரட்டும் உன் குரல் கேட்டு..,
நிலவு மலரட்டும் உன் முகம் பார்த்து..,
நட்பு மலரட்டும் நம்மை பார்த்து!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, December 18, 2012

மனதை தொலைத்து அழும்போது நட்பை தவிர வேற ஆறுதல் கிடையாது!!!!

அன்பை தொலைத்து அதை தேடும் போது நட்பின் ஆழம் தெரியாது..,
மனதை தொலைத்து அழும்போது நட்பை தவிர வேற ஆறுதல் கிடையாது!!!!
"நட்பு என்றும் உயந்தது"
நண்பன்டா!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, December 16, 2012

தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு

சற்று விலகிப்போ பெண்ணே..,
நீ உடைத்த என் இதயத்தின் துண்டுகள் உன் கால்களில் குத்திவிடலாம்..
என் இதயம் கண்ட காயம் உன் கால்களில் வேண்டாம்!!!!
இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை நீயும், நானும் பேச..,
இருக்கும் நாட்கள் தான் நமக்கு சொந்தம்..
தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு!!!!
&அன்புடன் எட்மன்& 

அன்பு வைத்த உள்ளத்தின் கோவம் கூட நமக்கு சுகமாக தான் தெரியும்!!!!

நம்மை ஜெயிக்க யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய்..,
மற்றவரை ஜெயிக்க நாம் பிறந்து இருக்கிறோம் என்பதே உண்மை!!!!
உறவின் மீது அன்பை வைப்பதை விட..,
உள்ளத்தின் மீது அன்பை வைத்து பார்..,
அன்பு வைத்த உள்ளத்தின் கோவம் கூட நமக்கு சுகமாக தான் தெரியும்!!!!
உரிமை உள்ள உறவுகள் மௌனமாக இருந்தால்..,
உயிர் கொண்ட உறவுகள் கண்ணீர் விடும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Thursday, December 13, 2012

நேசிக்க தெரிந்த இதயத்திற்கு மட்டும் தான் தெரியும் பிரிவின் வலிமை!!!!


வாசிக்க தெரிந்த விரல்களுக்கு தான் தெரியும் வீணையின் அருமை..,
நேசிக்க தெரிந்த இதயத்திற்கு மட்டும் தான் தெரியும் பிரிவின் வலிமை!!!!
நினைக்க நேரம் இல்லாத ஒரு இதயத்திற்கு..,
மறக்க நேரம் இல்லாத இதயம் சொல்லும் ஒரு வார்த்தை..,
Bye FRIEND!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, December 4, 2012

சிரிக்கும் இதயம் உடையவர்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு!!!!

இந்த உலகத்தில்..,
தூய இதயம் தான் மிகப்பெரிய ஆலயம்.
சிரிக்கும் முகங்களை நம்பாதே - ஆனால் 
சிரிக்கும் இதயங்களை நம்புங்கள்.
சிரிக்கும் இதயம் உடையவர்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு!!!!
&அன்புடன் எட்மன்&