அம்மா..!
உன் அளவில்லா அன்புக்கு ஏது.., நிகர் இவ்வுலகில்!!
மூன்றேழுத்து கவிதை சொல்லச்சொன்னால் முதலிலே சொல்வேன் " அம்மா " என்று..
என் மேனி அல்லல் உறும் போது இரவில் நான் கண்ட முதல் வைத்தியர் நீ அம்மா!!
என் வாழ்க்கைக்கு ஒளியேற்றியவள் நீ..
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் ஒரு பிறப்பு.., ஆனால் உனக்கு மட்டும் தான் அம்மா இவ்வுலகில் இரு பிறப்பு!!
உன்தாயின் கருவில் நீ உயிராகும் போது ஒரு பிறப்பு!!
உன் கருவில் நான் உயிராகும் போது இரண்டாம் பிறப்பு!!
என்றும் அன்புடன் எட்மன்..
No comments:
Post a Comment