வாழ்வின் அர்த்தம் புரியவைத்தவளே நான் ஒரு கவிப்பிரியன் தான்..,
ஆனபோதும் முன்பெல்லாம் வைரமுத்து கவிதைகளை வாங்கிச்சுவைப்பது மட்டுமே கவிதைக்கும், எனக்கும் இடையிலான தொடர்பாய் இருந்தது..,
உன்னை சந்திக்கும் அந்த நொடி வரை கவிபுனையும் ஆற்றல் என்னிடம் எள்ளளவும் இருந்ததில்லை..,
ஆனாலும் என்ன விந்தை என்று புரியவில்லை..,
என்னையே என்னால் நம்ப முடியவில்லை..,
உன் அறிமுகம் கிடைத்த அந்த நொடிமுதல் நான் உன் கவிஞ்ஞன் ஆகிப்போனேன்..,
உன்னை நினைத்தாலே போதும் என் கைகள் காகிதத்தை முத்தமிட தொடங்குகிறது..,
உன்னை நினைத்து கவிவடிக்க!!
ஒரு வேளை என் இதயம் என்னையறியாமல் உன்னை காதலிக்கத் தொடங்கிவிட்டதோ? தெரியவில்லை..,
கவிஞ்ஞர்கள் தான் முன்பே சொல்லிவிட்டார்களே.., காதலித்தால் கவிதை வரும் என்று!!
என் இதயம் என்னை அறியாமலேயே உன்னை காதலிக்கத் தொடங்கிவிட்டதோ? தெரியவில்லை!!
கவிஞ்ஞர்கள் தான் முன்பே சொல்லிவிட்டார்களே.., காதலித்தால் கவிதை வரும் என்று!!
No comments:
Post a Comment