Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Sunday, December 30, 2012

உள்ளம் அழுவதை நினைத்து கண்ணீர் துடைப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள்!!!!

அன்பு யார் மீதும் காட்டலாம் - அனால் 
கோபம் உரிமை உள்ளவர் மீது மட்டுமே காட்ட முடியும்..,
கோபம் அன்பை விட உயர்வானது!!!!
உன் முகம் சிரிப்பதை பார்த்து கைகொட்டுபவர்களை விட - உன் உள்ளம் 
அழுவதை நினைத்து கண்ணீர் துடைப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள்!!!!
&அன்புடன் எட்மன்&

வலி உனக்கு மட்டும் இல்லை.., நீ நேசித்த இதயத்திற்கும் தான்

யாரையும் புரிந்து கொண்டு நேசி..,
நேசித்த பின் புரிந்துகொள்ள முயற்சிக்காதே..,
வலி உனக்கு மட்டும் இல்லை..,
நீ நேசித்த இதயத்திற்கும் தான்!!!!
பிரிக்கமுடியாத சொந்தம்..,
மறக்கமுடியாத பந்தம்..,
தவிர்க்க முடியாத உயிர்..,
எல்லாமே நீ மட்டுமே!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Friday, December 28, 2012

உங்கள் நட்பை நேசித்தேன் மறக்கமுடியவில்லை

வானத்தை நேசித்தேன் தொட முடியவில்லை..
கடலை நேசித்தேன் அடைய முடியவில்லை..
காற்றை நேசித்தேன் பிடிக்கமுடியவில்லை..
உங்கள் நட்பை நேசித்தேன் மறக்கமுடியவில்லை!!!!
&அன்புடன் எட்மன்&

Thursday, December 27, 2012

நம்மை நேசிக்கும் உண்மையான இதயம் நமக்காக எப்போதும் காத்திருக்கும்!!!!

மழை பெய்யும் போது உன் இரு கைகளையும் நீட்டி மழை துளிகளை ஏந்திக்கொள்..,
எவ்வுளவு மழை துளைகளை நீ கையில் வைத்திருக்கிறாயோ.., அந்தளவிற்கு நீ என்னை நேசிக்கிறாய்!!
எவ்வுளவு மழை துளிகளை நீ ஏந்தாமல் விடுறியோ.., 
அந்தளவிற்கு நான் உன்னை நேசிக்கிறேன்!!!!
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை - ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம் நமக்காக எப்போதும் காத்திருக்கும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நீ சுவாசிக்கும் காற்றை தான் நானும் சுவாசிக்கிறேன்

உன்னை பார்க்க என் கண்கள் துடிக்குது..,
என் கண்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்??!!
நீ என் இமைகள் என்று!!!!
பார்க்க முடியாத தொலைவில் இருந்தாலும்..,
பேச முடியாத தூரத்தில் இருந்தாலும்..,
நீ சுவாசிக்கும் காற்றை தான் நானும் சுவாசிக்கிறேன்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, December 26, 2012

சிலர் உயிர் வாழ காரணமே நினைவுகள் தான்

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது - ஆனால் 
தண்ணீர் இல்லாமல் தாமரை வாழாது..,
நீயும் நானும் அருகில் இல்லை - ஆனால் 
உன் நினைவு இல்லாமல் நான் இருந்ததில்லை!!!!
நினைவுகளுக்கு உயிர் இல்லை - ஆனால் 
சிலர் உயிர் வாழ காரணமே நினைவுகள் தான்!!!!
&என்றும் உன் நினைவுடன் எட்மன்&

Monday, December 24, 2012

நம்மை விட நம்மை அதிகம் நேசிப்பவர்கள்

நாம் நினைப்பது நடப்பதுமில்லை..
நடப்பது நமக்கு பிடிப்பதுமில்லை - ஆனாலும் வாழ்கின்றோம் ஏன்!!??
நம்மை விட நம்மை அதிகம் நேசிப்பவர்கள் இருப்பதால்!!!!
பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்போம் பிரிவுகளை மட்டுமே..,
நினைவுகளை அல்ல!!!!
&அன்புடன் எட்மன்&

Sunday, December 23, 2012

உன் முகத்தில் சிரிப்பு என்ற பூவை மட்டும் தான் நான் பார்க்கவேண்டும்


ரோஜா தோட்டத்தில் பூக்கள் எப்படி பூத்து குலுங்குகிறதோ..,
அதை போல் உன் முகத்தில் சிரிப்பு என்ற பூவை மட்டும் தான் நான் பார்க்கவேண்டும்!!!!
காதலில் ஒரு நட்பு இருக்கும்.
நட்பில் ஒரு காதல் இருக்கும்.
காதலில் இருக்கும் நட்பு நீடிப்பதில்லை!!
ஆனால்.., நட்பில் இருக்கும் காதல் என்றென்றும் அழிவதில்லை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, December 19, 2012

நட்பு மலரட்டும் நம்மை பார்த்து

பூக்கள் மலரட்டும் உன் புன்னகையை பார்த்து..,
கவிதைகள் மலரட்டும் உன் குரல் கேட்டு..,
நிலவு மலரட்டும் உன் முகம் பார்த்து..,
நட்பு மலரட்டும் நம்மை பார்த்து!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, December 18, 2012

மனதை தொலைத்து அழும்போது நட்பை தவிர வேற ஆறுதல் கிடையாது!!!!

அன்பை தொலைத்து அதை தேடும் போது நட்பின் ஆழம் தெரியாது..,
மனதை தொலைத்து அழும்போது நட்பை தவிர வேற ஆறுதல் கிடையாது!!!!
"நட்பு என்றும் உயந்தது"
நண்பன்டா!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, December 16, 2012

தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு

சற்று விலகிப்போ பெண்ணே..,
நீ உடைத்த என் இதயத்தின் துண்டுகள் உன் கால்களில் குத்திவிடலாம்..
என் இதயம் கண்ட காயம் உன் கால்களில் வேண்டாம்!!!!
இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை நீயும், நானும் பேச..,
இருக்கும் நாட்கள் தான் நமக்கு சொந்தம்..
தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு!!!!
&அன்புடன் எட்மன்& 

அன்பு வைத்த உள்ளத்தின் கோவம் கூட நமக்கு சுகமாக தான் தெரியும்!!!!

நம்மை ஜெயிக்க யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய்..,
மற்றவரை ஜெயிக்க நாம் பிறந்து இருக்கிறோம் என்பதே உண்மை!!!!
உறவின் மீது அன்பை வைப்பதை விட..,
உள்ளத்தின் மீது அன்பை வைத்து பார்..,
அன்பு வைத்த உள்ளத்தின் கோவம் கூட நமக்கு சுகமாக தான் தெரியும்!!!!
உரிமை உள்ள உறவுகள் மௌனமாக இருந்தால்..,
உயிர் கொண்ட உறவுகள் கண்ணீர் விடும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Thursday, December 13, 2012

நேசிக்க தெரிந்த இதயத்திற்கு மட்டும் தான் தெரியும் பிரிவின் வலிமை!!!!


வாசிக்க தெரிந்த விரல்களுக்கு தான் தெரியும் வீணையின் அருமை..,
நேசிக்க தெரிந்த இதயத்திற்கு மட்டும் தான் தெரியும் பிரிவின் வலிமை!!!!
நினைக்க நேரம் இல்லாத ஒரு இதயத்திற்கு..,
மறக்க நேரம் இல்லாத இதயம் சொல்லும் ஒரு வார்த்தை..,
Bye FRIEND!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, December 4, 2012

சிரிக்கும் இதயம் உடையவர்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு!!!!

இந்த உலகத்தில்..,
தூய இதயம் தான் மிகப்பெரிய ஆலயம்.
சிரிக்கும் முகங்களை நம்பாதே - ஆனால் 
சிரிக்கும் இதயங்களை நம்புங்கள்.
சிரிக்கும் இதயம் உடையவர்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு!!!!
&அன்புடன் எட்மன்&

Monday, November 26, 2012

உன்னை தேடி வரும் அன்பை நீ ஒரு போதும் விட்டு விடாதே..

மூங்கில் காட்டையே அளித்து ஒரு புல்லாங்குழல் செய்தேன்..,
அதை ஊதும் போது தான் தெரிந்தது.., அதுவும் உன்னை போல் ஊமை என்று!!!!
உன்னை தேடி வரும் அன்பை நீ ஒரு போதும் விட்டு விடாதே..,
பிறகு நீயே தேடி சென்றால் கூட அது கிடைக்காமல் போய்விடலாம்!!!!
துன்பம் யாருக்கும் சொந்தமில்லை..,
இன்பம் யாருக்கும் நிரந்தரம் இல்லை..,
So.., Keep any time happiness!!!! 
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, November 25, 2012

மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட மனம் விட்டு பேசும் போது தான் மரணவலி கூட மறந்து போகும்!!!!

ஒரு காதலன் வீதியில் செல்லும் போது விபத்துக்குள்ளாகிவிட்டான். அவனுக்கு இன்னும் சில நிமிடங்களில் இறக்க போறன்  என்று தெரிந்ததும் அவனோட காதலிக்கும்.., நண்பனுக்கும் "Hey, I am going.., good bye" என்று குறும்செய்தி அனுப்பினான். அவனோட காதலி "Ok da.., take care" என்று பதில் அனுப்பினாள். காதலன் வலியால் துடிக்கவே.. அவன் நண்பன் கிட்ட இருந்து பதில் வந்தது "Hey stupid.., wait panra.., oru 2 minuts la varan.., sernthu povam" என்று. காதலன் சிரித்துக்கொண்டே இறந்துவிட்டான். That is "FRIEND SHIP"!!!!
மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட மனம் விட்டு பேசும் போது தான் மரணவலி கூட மறந்து போகும்!!!!
"So share your feelings with your favorite person"
- with love Edmon Jegatheepan

நீ விரும்பியதை நினைத்துக்கொள்.., நிச்சயம் ஒரு நாள் அது நிறைவேறும்!!!!


மனம் விரும்பியது உனக்கு கிடைக்கவில்லை என்றால்..,
தினம் ஒரு முறையாவது நீ விரும்பியதை நினைத்துக்கொள்..,
நிச்சயம் ஒரு நாள் அது நிறைவேறும்!!!!
இந்த நிமிடம் நீ என்னை காணத்துடித்தால் உன் இமைகளை மெதுவாக மூடி பார்..,
உன் இதயம் துடிக்கும் தூரத்தில் நான் வந்திருப்பன்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

உன் இதயம் என்னும் சொர்க்கத்தில் ஆயுள் கைதியாக இருக்கவே விரும்புகிறேன்!!!!

நீ தூங்குமிடம் என் இதயம் என்றால்..,
நீ விழிக்கும் வரை நிறுத்திவைப்பேன் என் இதய துடிப்பை!!!!
தனிமை என்னும் நரகத்தில் அரசனாய் இருப்பதை விட..,
உன் இதயம் என்னும் சொர்க்கத்தில் ஆயுள் கைதியாக இருக்கவே விரும்புகிறேன்!!!!
&என்றும் உன் ஆயுள் கைதியாய் எட்மன்&

உன்னை பற்றி தான் நினைக்கும்!!!!



என் இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும்..,
ஆனால் அந்த இடைவெளி கூட உன்னை பற்றி தான் நினைக்கும்!!!!
எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல..,
என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு!!!!
&அன்புடன் எட்மன்&

மலரும் கனவுகள் இனிமையானதாக மலரட்டும்!!!!

பாசமான மனசுக்கு..,
செல்லமான அன்புக்கு..,
உண்மையான உங்களுக்கு..,
ஒரு இனிமையான இதயம் சொல்லும்..
அன்பான இரவு வணக்கங்கள்.., மலரும் கனவுகள் இனிமையானதாக மலரட்டும்!!!!
&அன்புடன் எட்மன்& 

Sunday, November 11, 2012

மனது அழும் ஓசையை யாராலும் கேட்கமுடியாது!!

மௌனங்கள் ஆயிரம் வார்த்தைகள் பேசும்!!
ஆனால்..,
ஆயிரம் வார்த்தைகள் சேர்ந்தால் கூட ஒரு நொடி மௌனத்திற்கு ஈடாக முடியாது!!!!
இதயம் துடிக்கும் ஓசையை கூட கேட்க முடியும்!!
ஆனால்.., 
மனது அழும் ஓசையை யாராலும் கேட்கமுடியாது..
என் உண்மையான நட்பு உன்னை தவிர!!!!
&அன்புடன் எட்மன்&

Thursday, November 8, 2012

I Never Miss You FRIEND!!!!

உங்களை தேடி நான் வரலாம்..,
என்னை தேடி நீங்களும் வரலாம்..
ஆனால்..,
நம்மை தேடி பிரிவு வரகூடாது!!
I
Never
Miss
You
FRIEND!!!!

நட்பு என்றாலும்.., அன்பு என்றாலும் இதயத்தில் வைக்கவேண்டியது இரண்டு வரிகள்..
பழகும் வரை உண்மையாய் இரு..,
பழகிய பின் உயிரா இரு!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Saturday, November 3, 2012

நீ தந்துவிட்டு சென்ற சோகங்கள் என் விழியோரம் நதியாய் தவழ்கின்றது!!!!

நானும் இயற்கையும் ஒன்றாகிவிட்டோம் - காரணம் 
உன் இன்ப நினைவுகள் பல வண்ண வானவில்லாய் என் இதழோரம் தவழ்கின்றது..,
நீ தந்துவிட்டு சென்ற சோகங்கள் என் விழியோரம் நதியாய் தவழ்கின்றது!!!!
உன் நினைவுகள்..
என் இதயத்தில் துளிர் விடும் போது - அது 
வாடாமல் என் கண்கள் மழை பொழிகின்றது - அது 
சுகமா.., வலியா.., என்று எனக்கு இதுவரை தெரியவில்லை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

எனக்கே தெரியாமல் என் இதயத்தில் வாழும் உன் அன்பை நான் நேசிக்கிறேன்!!!!

உன்னை கேட்காமலே உன்னை தேடி வரும் காற்றை போல.., 
என்னை கேட்காமலே எனக்கே தெரியாமல் என் இதயத்தில் வாழும் உன் அன்பை நான் நேசிக்கிறேன்!!!!
மரணம் இல்லாமல் வாழ ஆசை தான் எனக்கு.., 
இந்த மண்ணில்  அல்ல.., 
என்றும்  உன் மனதில் மட்டும்!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, October 31, 2012

உன் அன்பு தான் என் இதயம் என்றால் எப்படி மறக்க முடியும் உன்னை

இதயத்தில் அன்பு இருந்தால் உன்னை மறந்து விடலாம்..,
உன் அன்பு தான் என் இதயம் என்றால் எப்படி மறக்க முடியும் உன்னை!!!!
உன்னை கருவறையில் சுமந்த அன்னை கூட கலந்து கொள்ள முடியாத உன் இறுதி மரண ஊர்வலத்தில் உன் நண்பன் வருவான்.., 
கலந்து கொள்ள அல்ல..,
உன்னை சுமந்து செல்ல!!!!
&அன்புடன் எட்மன்&

Tuesday, October 30, 2012

"தொலையாத உன் நினைவுகள் என்னில் உள்ளவரை உன் தொலைவும் எனக்கு ஒரு சுகம் தான்"

அன்பு கொண்ட நீ.. 
என் அருகில் இருந்தால் என்ன? என் தொலைவில் இருந்தால் என்ன? 
தொலையாத உன் நினைவுகள் என்னில் உள்ளவரை உன் தொலைவும் எனக்கு ஒரு சுகம் தான். 
தொலைக்காதே என் நினைவுகளை.., 
தொலைத்தால் இறந்துவிடும் என் இதயம்!!!!
நடந்து வந்த பாதையும் தெரியவில்லை..
நடந்து போகும் பாதையும் தெரியவில்லை..
நடப்பது உன்னிடமென்று மட்டும் புரிகிறது!!!!
&என்றும் உன் மறவா அன்புடன் எட்மன்&

Tuesday, October 16, 2012

" நீ என்னை விட்டு போனா.. நான் அளமாட்டன்.., but என்னை சுற்றி எல்லாரும் அளுவாங்க "


&&&&&&&&
True Love..
&&&&&&&&
A girl and a boy were holding hands and suddenly the girl asked :
Girl : நான் அழகா இருக்கிறனா?
Boy : இல்லை..
Girl : நீ என்கூட வாழ விரும்புறியா?
Boy : இல்லை..
Girl : நான் உன்னை விட்டு போய்ற்றா நீ அழுவியா?
Boy : இல்லை..
The girl started to cry..,
The boy pulled her close to him and hug her. She even cried louder...,
and he said..,
" நீ அழகா இல்ல.., but நீ ரொம்ப அழகா இருக்கிற "
" எனக்கு உன்கூட வாழ விருப்பம் இல்லை.., but உனக்காக வாழ விரும்புறன் "
" நீ என்னை விட்டு போனா.. நான் அளமாட்டன்.., but என்னை சுற்றி எல்லாரும் அளுவாங்க "
-with love Edmon Jegatheepan..

Saturday, September 29, 2012

உன்னை தேடி வரும் அன்பு ஆழமானது!!!!

நீ 
தேடி போகும் 
அன்பு அழகானதாக இருக்கலாம்.., 
ஆனால்.. 
உன்னை 
தேடி வரும் அன்பு 
ஆழமானது!!!!
உன் உயிரில்..
உன் மனதில்.. 
உன் உணர்வில்.. 
உன் கனவில்.. 
உன் நினைவில்.. 
உன் அன்பில்..
உன் இதயத்தில் யாரும் இருக்கலாம். 
ஆனால்..
உனக்காக யாரும் இல்லாத போது நான் இருப்பன் உன் நண்பனா!!!!
&என்றும் உன் மறவா நட்புடன் எட்மன்&

Thursday, September 27, 2012

நான் உன் கண்களில் இருப்பேன்..

இன்று நீ என்னை பிரிந்தாலும்.., மறந்தாலும்..,
என்றாவது நீ என்னை நினைக்கும் போது..,
நான் உன் கண்களில் இருப்பேன்..
ஒரு துளி கண்ணீராக!!!!
எல்லாமே கிடைக்க வேண்டும் என்று நினைக்காதே..,
சில விசயங்கள் கிடைக்காமல் இருப்பதே ஆண்டவன் கொடுத்த வரம்!!!!
&அன்புடன் எட்மன்&

Sunday, September 23, 2012

என்னவளே!! நீ எப்போது அந்த விஞ்ஞானிகள் கண்ணில் அகப்பட்டாய்..!!??


^^^^^^^^^^
நிலாவா நீ..
^^^^^^^^^^
என்னவளே!!
நீ எப்போது அந்த விஞ்ஞானிகள் கண்ணில் அகப்பட்டாய்..!!??
உன்னை கண்டநாள் முதல்..,
அவர்கள் புதியதோர் நிலாவைக் கண்டுபிடித்து விட்டதாக..,
புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்!!!!
&அன்புடன் எட்மன்& 

Saturday, September 22, 2012

எவ்வாறு எடுத்துரைப்பேன் அவைகளுக்கு...........!!????? நமக்குள் இடைவெளி நிரந்தரமாகிவிட்டது என்று!!!!

நானும் நீயும்,
ஒன்றாக சேர்ந்து
ரசித்த சிற்பங்கள் எல்லாம்..,
உன்னைப்பற்றி கேட்கின்றன..
நீயின்றி நான் தனியாக
நம் ஆலயத்துக்கு செல்லும் போது....!!
எவ்வாறு எடுத்துரைப்பேன் 
அவைகளுக்கு...........!!?????
நமக்குள் இடைவெளி 
நிரந்தரமாகிவிட்டது என்று!!!!
&என்றும் அன்புடன் எட்மன்&

Sunday, September 16, 2012

நம் பார்வைகள், சந்தித்துக்கொள்ளும் புள்ளிகள்.., நட்சத்திரங்களாகின்றன!!!!

நீ என் அருகில் இருந்தால்
எனக்கு கிட்டப்பார்வை..,

நீ என் தொலைவில் இருந்தால்
எனக்கு தூரப்பார்வை!!!!

அங்கிருந்து நீயும்..,
இங்கிருந்து நானும்..,
வானம் பார்க்கும் போது!!

நம் பார்வைகள்,
சந்தித்துக்கொள்ளும் புள்ளிகள்..,
நட்சத்திரங்களாகின்றன!!!!

&என்றும் அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Thursday, August 30, 2012

உன் துன்பத்தை பகிர்ந்து கொள்ள ஒரு ஜீவன் இங்கு உண்டு

உன் இன்பத்தை பகிர்ந்து கொள்ள நூறு சொந்தங்கள் இருந்தாலும்..,
உன் துன்பத்தை பகிர்ந்து கொள்ள ஒரு ஜீவன் இங்கு உண்டு!!
விழிகளை காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும்..,
அப்போது தான் கண்ணீரை துடைக்கும் கைகள் யாருடையது என்று தெரியும்??!!!!
&எட்மன்&

Tuesday, August 28, 2012

சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்


கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்..,
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்..,
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்..,
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்..,
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்..,
பொய்யாய் பேசினால் பெயரையே இழப்பாய்..,
சிந்தித்துப் பேசினால் சிறப்பாக இருப்பாய்..,
சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்..,
அன்புடன் எட்மன்!!!!

Saturday, August 25, 2012

வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்!!

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலையசைக்கும்..,
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசையமைக்கும்.
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை..,
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை.

பாதம் இணைந்து நடக்கும்.., இந்த பயணத்தில் என்ன நடக்கும்??!!
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்!!
மழைத்துளி, பனித்துளி கலைந்த பின்னே.., அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா??!!!!
கண்ணிமைகள் கைதட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே..,
உன் செவியில் விழவில்லையா!!?? உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே!!
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை..,
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை.

உன்னை எனக்கு பிடிக்கும்.. அதை சொல்வதில் தானே தயக்கம்..
நீயே சொல்லும் வரைக்கும்.. என் காதலும் காத்து கிடக்கும்..
தினம்.., தினம்.., கனவினில் வந்துவிடு..,
நம் திருமண அழைப்பிதல் தந்துவிடு!!!!

Saturday, August 18, 2012

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தாலே நீ கிடைத்தாய்.., பசும்பொன்னை பித்தளையா..!! தவறாக நான் நினைச்சேன்!!!!

செவ்விளநீர் நான் குடிக்க.., சீவியத்தை நீ கொடுக்க..,
சிந்தியது இரத்தமல்ல எந்தன் உயிர் தான்..
கல்லிருக்கும் தாமரையே.., கையணைக்கும் வான் பிறையே..,
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர் தான்..
 

 
இனிவரும் எந்தப்பிறவியிலும்.., உன்னைச்சேர காத்திருப்பேன்..,
விழி மூடும் இமைபோலே விலகாமல் வாழ்ந்திருப்பேன்..
உன்னைப்போல தெய்வமில்ல.., உள்ளம் போல கோவில் இல்ல..,
தினம் தோறும் அர்ச்சனை தான்.., எனக்கு வேற வேலையில்லை!!!!

Sunday, August 12, 2012

ஏன் என்னை மட்டும் ஒதுக்கி வைத்தாய்!!!!

தொலைக்காமல்
தொலைத்த உன்னை
தூரம் பார்க்கையிலே
என்னை பார்த்தும் பார்க்காமல்
போகிறாய்....
உந்தன் நெஞ்சில்
ஈரம் இல்லையடி
எந்தன் நெஞ்சில் காயம் உள்ளதடி..



உன் இன்ப பார்வையில்
நனைந்தே பழக்கப்பட்ட
என் இதயம் - உன்
இரும்பு பார்வையிலே
இளைத்து போனதடி
உன் பார்வையே
என் இதயத்தை துளைத்து
சென்றதடி..  


என்னை நீ
பிரிந்து இருக்கிறாய்
என் இதயத்தை
பறித்து வைத்திருக்கிறாய்
உன் இதயத்தால் என்
இதயத்தை செதுக்கி
வைத்தாய் - ஏன்
என்னை மட்டும்
ஒதுக்கி வைத்தாய்!!!!

nice people like you always remain in heart for ever..



Flowers die..
Stories end..
Songs fade..
Memories are forgotten..,
All things come to end .., But nice people like you always remain in heart for ever.
- with love Edmon Jegatheepan..

உன் நினைவின் அகோரம் கர்ப்பம் கலைந்தால் கூட என் தேகம் உணராது

>>>>>>>>>>>>>>>>>>
நெளிகிறது மனசு..
>>>>>>>>>>>>>>>>>>

என் மனம் துடிதுடிக்கும். சில வேளைகளில் உன் வருகை கேட்டு தானாக அது படபடக்கும் உன் வருகைக்காக. ஏனோ தெரியவில்லை என் இதயம் வெகுவாக துடிக்கிறது லப்-டப் என்று. உன் நினைவின் அகோரம் கர்ப்பம் கலைந்தால் கூட என் தேகம் உணராது. என்னவனே கருகும் மனதில் ஓர் உருகல் நிலை. காலநிலை வேவு பார்க்கும் ஓர் அந்தரங்கம். எல்லாமே என் மனதை உதைக்கிறது. 
உன் ஞாபகம் தான் என்னை சிதைக்கின்றது. என் தாய்க்கும் புரியவில்லை.., என் கர்ப்பத்தின் சந்தர்ப்பவாதம். என் பிறப்பில் எனக்கு கொஞ்சம் சங்கர்ப்பம் உன்னை நினைத்து. என் வேதனை உனக்குப்புரியாது. அதை என் தாயே அறிவாள். நீ எதைத்தான் புரிந்தாய் என்னவனே. 
காலமெனும் கடலுக்கும் காதல் எனும் கடுகிற்கும் வித்தியாசம் உனக்குப்புதிர். அனால் நான் தான் விடை. என்னை அளவைத்துப்பார்க்கிறாய்.., அதில் உனக்கு என்ன ஆறுதல் உண்டு என்னவனே..!!?? என் அழுகையை நினைத்துப்பார் என் மின்சார உடலின் தாக்குதலை உன் ஊனமுற்ற உறுப்புக்கள் கூட நிச்சயமாக மீண்டும் இயங்கும். உனக்காக நான் காத்திறுக்கிறேன். 


மீண்டும் சிந்தித்துப்பார் உனக்காக நான் காத்திருக்கிறேன். என்னை கொஞ்சம் நினைத்துப்பார் உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன்.
"என்றும் என் உடலும் என் உயிரும் உனக்கே சமர்ப்பணம்"
அன்புடன் பிரியசகி..

எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..