ஆரப்பரெப்பின் பூரிப்பில் மகிழ்ச்சியில் என்னை ஆசையோடு நோக்கிய அந்த விழிகள் என்னுள் என்றும்...!!
அன்பாகபேசி உறவுகள் வளர்த்து புத்தியுடன் பிரியமுடன் பேசி கள்ளமில்லா சிரிப்பில் என் இதயத்தினுள் நுழைந்தவளே..
உன்னை மனம் பேசி கரம் பற்றி என்னவளாய் ஏற்றபோதே உலகமே என் கையருகில் வந்ந்தது என்றே நினைத்தேன். நீ தாய்மை அடைந்தபோதே நான் முளுமையடைந்தேன். பாசத்தை பந்தமாகமாற்றி தந்தை என்ற ஒரு உறவொன்றை தந்தவளே...!! இத்தனை இனிய சுகங்களை தந்த உன்னை இறைவன் என்னை விட்டு பிரித்தபோதே என்னையே இழந்தேன்...
என் அன்பே என்னை விட்டு நீ வெகுதூரம் கண்கான தொலைவில் சென்றாலும், உன் நினைவுகள் மட்டும் என்னுள் என்றும் பசுமையாக காலங்கள் மாறிநினும் நீங்காத அன்பு தந்தவளே, உன்னை என் இதயகருவறையில் என்றும் உன் அழகான அந்த இனிய நினைவுகளை சுமந்து இருக்கிறேன்.
அன்றொருநாள் தரிசு நிலமாய் இருந்த போதே உன் உச்சாக வார்த்தைகளால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை சொல்லித்தந்து செயலில் செய்து காட்டி என்னை பூத்து குலுங்கும் விளைநிலமாய் மாற்றியவளே...!!!
நீ உன் அன்பையும், நேசத்தையும் மட்டுமா எனக்குத்தந்தாய்? உன்னையும் சேர்த்து, உன்னையும் சேர்த்தல்லவா எனக்குத்தந்தாய்.. என் உயிரே.. உன்னை எழுத வார்த்தைகள் இனி இல்லை எனக்கு..!!
எனக்குள் இல்லாமல் போன என்னவளே..!! பொல்லாத பிரிவு சொல்லாமல் வந்தாலும் என் விழிகள் நிறைய வளிகள் நிறைய இருந்தும், உன் பிரிவினை, என் உறவினை.. என்னை.... என்னக்குள்.....!!!!
உன்நினைவுகளை வரமாக ஏற்றி என் உயிர் உள்ளவரை நீ என்னுடனே வாழ்ந்திருப்பாய் என்றும் நீஞ்காத அன்புடனே....
என் அன்புள்ள காதலுக்கு இம்மடல் சமர்ப்பணம..
No comments:
Post a Comment