Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Thursday, August 30, 2012

உன் துன்பத்தை பகிர்ந்து கொள்ள ஒரு ஜீவன் இங்கு உண்டு

உன் இன்பத்தை பகிர்ந்து கொள்ள நூறு சொந்தங்கள் இருந்தாலும்..,
உன் துன்பத்தை பகிர்ந்து கொள்ள ஒரு ஜீவன் இங்கு உண்டு!!
விழிகளை காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும்..,
அப்போது தான் கண்ணீரை துடைக்கும் கைகள் யாருடையது என்று தெரியும்??!!!!
&எட்மன்&

Tuesday, August 28, 2012

சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்


கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்..,
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்..,
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்..,
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்..,
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்..,
பொய்யாய் பேசினால் பெயரையே இழப்பாய்..,
சிந்தித்துப் பேசினால் சிறப்பாக இருப்பாய்..,
சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்..,
அன்புடன் எட்மன்!!!!

Saturday, August 25, 2012

வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்!!

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலையசைக்கும்..,
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசையமைக்கும்.
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை..,
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை.

பாதம் இணைந்து நடக்கும்.., இந்த பயணத்தில் என்ன நடக்கும்??!!
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்!!
மழைத்துளி, பனித்துளி கலைந்த பின்னே.., அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா??!!!!
கண்ணிமைகள் கைதட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே..,
உன் செவியில் விழவில்லையா!!?? உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே!!
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை..,
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை.

உன்னை எனக்கு பிடிக்கும்.. அதை சொல்வதில் தானே தயக்கம்..
நீயே சொல்லும் வரைக்கும்.. என் காதலும் காத்து கிடக்கும்..
தினம்.., தினம்.., கனவினில் வந்துவிடு..,
நம் திருமண அழைப்பிதல் தந்துவிடு!!!!

Saturday, August 18, 2012

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தாலே நீ கிடைத்தாய்.., பசும்பொன்னை பித்தளையா..!! தவறாக நான் நினைச்சேன்!!!!

செவ்விளநீர் நான் குடிக்க.., சீவியத்தை நீ கொடுக்க..,
சிந்தியது இரத்தமல்ல எந்தன் உயிர் தான்..
கல்லிருக்கும் தாமரையே.., கையணைக்கும் வான் பிறையே..,
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர் தான்..
 

 
இனிவரும் எந்தப்பிறவியிலும்.., உன்னைச்சேர காத்திருப்பேன்..,
விழி மூடும் இமைபோலே விலகாமல் வாழ்ந்திருப்பேன்..
உன்னைப்போல தெய்வமில்ல.., உள்ளம் போல கோவில் இல்ல..,
தினம் தோறும் அர்ச்சனை தான்.., எனக்கு வேற வேலையில்லை!!!!

Sunday, August 12, 2012

ஏன் என்னை மட்டும் ஒதுக்கி வைத்தாய்!!!!

தொலைக்காமல்
தொலைத்த உன்னை
தூரம் பார்க்கையிலே
என்னை பார்த்தும் பார்க்காமல்
போகிறாய்....
உந்தன் நெஞ்சில்
ஈரம் இல்லையடி
எந்தன் நெஞ்சில் காயம் உள்ளதடி..



உன் இன்ப பார்வையில்
நனைந்தே பழக்கப்பட்ட
என் இதயம் - உன்
இரும்பு பார்வையிலே
இளைத்து போனதடி
உன் பார்வையே
என் இதயத்தை துளைத்து
சென்றதடி..  


என்னை நீ
பிரிந்து இருக்கிறாய்
என் இதயத்தை
பறித்து வைத்திருக்கிறாய்
உன் இதயத்தால் என்
இதயத்தை செதுக்கி
வைத்தாய் - ஏன்
என்னை மட்டும்
ஒதுக்கி வைத்தாய்!!!!

nice people like you always remain in heart for ever..



Flowers die..
Stories end..
Songs fade..
Memories are forgotten..,
All things come to end .., But nice people like you always remain in heart for ever.
- with love Edmon Jegatheepan..

உன் நினைவின் அகோரம் கர்ப்பம் கலைந்தால் கூட என் தேகம் உணராது

>>>>>>>>>>>>>>>>>>
நெளிகிறது மனசு..
>>>>>>>>>>>>>>>>>>

என் மனம் துடிதுடிக்கும். சில வேளைகளில் உன் வருகை கேட்டு தானாக அது படபடக்கும் உன் வருகைக்காக. ஏனோ தெரியவில்லை என் இதயம் வெகுவாக துடிக்கிறது லப்-டப் என்று. உன் நினைவின் அகோரம் கர்ப்பம் கலைந்தால் கூட என் தேகம் உணராது. என்னவனே கருகும் மனதில் ஓர் உருகல் நிலை. காலநிலை வேவு பார்க்கும் ஓர் அந்தரங்கம். எல்லாமே என் மனதை உதைக்கிறது. 
உன் ஞாபகம் தான் என்னை சிதைக்கின்றது. என் தாய்க்கும் புரியவில்லை.., என் கர்ப்பத்தின் சந்தர்ப்பவாதம். என் பிறப்பில் எனக்கு கொஞ்சம் சங்கர்ப்பம் உன்னை நினைத்து. என் வேதனை உனக்குப்புரியாது. அதை என் தாயே அறிவாள். நீ எதைத்தான் புரிந்தாய் என்னவனே. 
காலமெனும் கடலுக்கும் காதல் எனும் கடுகிற்கும் வித்தியாசம் உனக்குப்புதிர். அனால் நான் தான் விடை. என்னை அளவைத்துப்பார்க்கிறாய்.., அதில் உனக்கு என்ன ஆறுதல் உண்டு என்னவனே..!!?? என் அழுகையை நினைத்துப்பார் என் மின்சார உடலின் தாக்குதலை உன் ஊனமுற்ற உறுப்புக்கள் கூட நிச்சயமாக மீண்டும் இயங்கும். உனக்காக நான் காத்திறுக்கிறேன். 


மீண்டும் சிந்தித்துப்பார் உனக்காக நான் காத்திருக்கிறேன். என்னை கொஞ்சம் நினைத்துப்பார் உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன்.
"என்றும் என் உடலும் என் உயிரும் உனக்கே சமர்ப்பணம்"
அன்புடன் பிரியசகி..

எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..
   

Saturday, August 11, 2012

I'm always with you as your FRIEND!!!!

If you feel little bored.., little sick.., little sad.., all lost.. You know what's wrong?
You are suffering from lack of vitamin "ME"!!!!
Flowers are waiting to wake for you..
Birds are waiting to sing for you..
Angels are waiting to see you..
I'm waiting for wish you..
I'm always with you as your FRIEND!!!!
&Edmon&

Friday, August 10, 2012

நம் வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா!!????

<<<<<<<<<
அழகே!!!!
<<<<<<<<<

உன் வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அழகே உன்னை பிரிந்தேன்.., என் அறிவில் உன்னை இழந்தேன்.
வெளியே அழுதால் வெட்கம் என்று .., விளக்கை அணைத்து அழுதேன்!!

அன்பே உன்னை வெறுத்தேன்.., என் அறிவை நானே எரித்தேன்.
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி புதைந்தேன்!!
பழைய மாலையில் புதிய பூக்கடல் தேறாதா!!??
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா!!??
நம் வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா!!????

Thursday, August 9, 2012

காதலை கோவிலாக நினைத்தால் இன்று கண்ணீர் ஆறும் தீர்த்தமாக ஓடுகிறது

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
என் காதோரமாய் பயணம் செய்யும் கண்ணீர்த்துளிகளின் யாத்திரை என் இரவுகளை சுவாசம் செய்கிறது
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

என் கூடவே இருந்து என் மனதோடு விளையாடிச்சென்ற உன் நினைவுகளை மீட்டும் போது என் காதோரமாய் பயணம் செய்யும் கண்ணீர்த்துளிகளின் யாத்திரை என் இரவுகளை சுவாசம் செய்கிறது. என்னவளே என் நினைவில் நீ இருந்த போது நீ எனக்கு அனுப்பின கைத்தொலைபேசி குறுஞ்செய்திகளை உன்னினைவாய் என் கைப்புத்தகத்தில் வரைந்து நாளொருமுறை பார்க்கும் போது என் கண்ணீர்த்துளிகளால் கரைந்துபோகும் எழுத்துக்கள் என் கனவுகளையும் கரைத்து போகிறது. 
மரித்துப்போன காதலின் சுவடுகளாய் கண்ணீர் என்றும் என் கன்னத்தில் தரித்து நிக்கிறது காதலி. காதலை கோவிலாக நினைத்தால் இன்று கண்ணீர் ஆறும் தீர்த்தமாக ஓடுகிறது என் காதலே. என்றுமே உன் சந்தோசத்தை ரசிக்கும் உன் ரசிகனாய் எட்மன்..

கண்டிப்பா ஏற்றுக்கொள்ளுவன்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மரிப்பின் வலியும்.., வேதனையும் அறிந்தவன் நான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


ஐக்கினியால் கூட அணைக்க முடியவில்லை எமது நினைவுகளை. அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள் ஏனடி என் மனதினுள்..!! காவல் கடமை உழைப்பில் வாழ்பவன் தானே.., எப்படி இவன் எனக்கு மூன்று வேளை சோறு போடுவான்??!! என்று நினைத்தாயோ!!?? ஏ பெண்ணே நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில் உன்னிடம் சில கேள்விகள்.. எனது கேள்விக்கான பதில் யாது? 
ஓ மறந்து விட்டாயா? சந்தோசமா வாழுறாயா? உன் கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர் பார்க்கவில்லை. முறிந்து.., பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்து விடாதே..!!!! எனது வாழ்வில் இப்பொழுது தான் மரித்து உயிர்த்து எழுந்திருக்கிறேன். மரிப்பின் வலியும்.., வேதனையும் அறிந்தவன் நான். 
மீண்டும் ஒரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை எனக்கு என் உடம்பில் கூட..!! உன்னை மறக்கும் வேளையில் மரணித்து விட வேண்டும் என எழுதியவனும் நான் தான். உன் நினைவால் நான் சிந்தின கண்ணீர்த்துளிகளை விட கசக்கி எறிந்த கவிதைகள் தானடி அதிகம். 
அத்தனையும் வரிகள் நிரம்பிய பாரம் கூடிய கவித்துளிகள் உனக்காக நான் எழுதியவை "என்னை கண்டிப்பா ஏற்றுக்கொள்ளுவன்" என்று அன்று நீ சொன்ன நம்பிக்கையில். அனால் இன்று உன்னருகே நான் யாரோவாய்..,
எட்மன்..

Tuesday, August 7, 2012

இந்த உலகத்திலேயே இல்லாத ஒரு சொர்க்கம் அந்த பெரியவங்களோட மனசுக்குள்ள இருக்கும்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த மண் என் கால்தடம் பட்ட மண். இங்க நான் வாழ்ந்து இருக்கிறன். இந்த மண்ணை விட்டு நான் ஏன் போகணும். அவர்களுடைய எதிர்காலம் அதை அவர்கள் பார்த்துக்கட்டும். எங்களுடைய வாழ்க்கை இங்கேயே முடிஞ்சு போகட்டுமே!!!!??
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@
 
புலம் பெயர்ந்த இளைஞ்ஞர்கள் வந்து அவங்க அப்பா.., அம்மாவை இங்கே தவிக்க விட்டுட்டு தனியா இருக்கிறாங்களோ!!?? அப்பா..,
அம்மாவை விட்டுடான்களோ!!?? என்ற உணர்வு கூட எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. எங்கட இளைஞ்ஞர்கள் அவர்கள் மட்டும் வெளிநாட்டில சந்தோசமா Settle ஆகிட்டு அவங்க அப்பா.., அம்மாவை விட்டுடான்களோ என்ற மாதிரி.., அண்மையில் இப்படி நான் சந்தித்த தம்பதிகள் கிட்டத்தட்ட அவங்களுக்கு ஒரு 65 வயசுக்கு மேல இருக்கும்.
மகன்.., மகள் எல்லோருமே ஆஸ்திரேலியாவில் சந்தோசமா இருக்கிறாங்க.., சந்தோசமா குடியேறி இருக்கிறாங்க. அங்கேயே தங்களுடைய எதிர்காலத்தை அமைச்சுகிட்டாங்க குடியுரிமையுடன். இன்னமும் நீங்க இங்கேயா தனிய இருக்க போறிங்க? கடைசிகாலத்தில இரண்டு பெரும் ஒத்தாசையா ஒருவருக்கொருவர் எவ்வுளவு காலம் இங்கேயே இருக்கப்போறிங்க??
பேசாம உங்க பையன் கூடவோ.. பொண்ணு கூடவோ போய் settle ஆகிடலாமே!!?? நம்ம வாழ்க்கை எப்படி வருதோ.., அதே போக்கிலேயே அனுபவிக்கணும் என்றத உங்களை மாதிரி பெரியவங்ககிட்ட இருந்து தானே கற்று கொண்டன் என்று நான் அவங்களை பார்த்து சொன்னபோ.., கண்டிப்பா நாங்க போறம்பா.., இங்க எங்களால தனிய இருக்க முடியாது. கொழும்பிலையும் நாங்க இருக்க போறது இல்லை. கண்டிப்பா நாங்க போகப்போறம். உடன நான் எங்க போகப்போறிங்க? எப்ப போகப்போறிங்க? என்ற போ.., மானிப்பாய் எங்க ஊருக்கு நாங்க போகப்போறம் என்று சொல்லி சொன்னாங்க.
அவங்க சொன்ன ஒரு விஷயம் என் மனசை ரொம்ப தொட்டுடிச்சுங்க.., ஏதோ ஒரு வேகத்தை நோக்கி ஓடிப்போய்.., ஏதோ ஒரு நாட்டில போய் வாழ்றதுல எல்லாம் எங்களுக்கு அக்கறை இல்லை. இது இந்த மண் என் கால்தடம் பட்ட மண். இங்க நான் வாழ்ந்து இருக்கிறன். இந்த மண்ணை விட்டு நான் ஏன் போகணும். அவர்களுடைய எதிர்காலம் அதை அவர்கள் பார்த்துக்கட்டும். எங்களுடைய வாழ்க்கை இங்கேயே முடிஞ்சு போகட்டுமே என்று சொல்லி போய்கிட்டு இருந்தாங்க.
பெரியவங்களோட மனசை படிக்கிறது ரொம்ப கஷ்டமுங்க. ஆனா ஆழ்ந்து .., ஆழமாய் போய் நாம பார்த்தமென்றா இந்த உலகத்திலேயே இல்லாத ஒரு சொர்க்கம் அந்த பெரியவங்களோட மனசுக்குள்ள இருக்கும்.
குழந்தைகளுடைய மனசு எந்தளவுக்கு தூய்மையாக இருக்குமோ.., அவங்களுக்குள்ள எப்படியொரு உலகம் இருக்குமோ.. அதே மாதிரி இந்த பெரியவங்ககிட்டயும் இருக்கு பாருங்க.

நன்றி.
உங்கள் நட்புடன் என்றும்..,
எட்மன் ஜெகதீபன்..

கேட்க முடியாத காதலின் ஆயுள்.., ஆயுள் முடியும் வரை இருக்கும் என்று சொல்லி சொல்லுவாங்க



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சொல்லப்படாமல் இருக்கும் காதல் வெல்லப்படாமல் இருக்கும் போருக்கு சமன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அவ என்ன பேசப்போறனு எனக்குப்புரியல.., அவகிட்ட என்ன பேசிறதுனு எங்கு புரியல. இப்படியே காலங்கள் கடந்து போக.., அந்த காதல் என்ற கோட்டால மட்டும் நாம ஏதோ ஒரு இடத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறமாதிரியே ஒரு உணர்வு. அவளுடைய பின்னணி என்ன? அவளுடைய வாழ்க்கைத்தரம் என்ன? அவ எப்படி வளர்ந்து வந்தா? எதுவுமே தெரியாது எனக்கு..!! என்னுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது அப்படின்னு நினைச்சு பார்க்கவும் முடியாத அளவு அவளுடைய வாழ்க்கையில ஈடுபட நான் ஆரம்பிச்சது தான் என்னோட காதல்ல நான் பண்ணின முதலாவது புத்திசாலித்தனம்.
அவளுக்கு என்னை பிடிச்சிருக்குதா? இல்லேன்னா அவளுக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்குதா? இல்லை.., யாரையாவது ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டாளா? இந்த மாதிரியான கேள்விகள் எல்லாமே கேட்கிறதுக்கு முன்னாலேயே.., என்னுடைய விருப்பு.., வெறுப்புகள் அத்தனையுமே அவளையே சுத்தி வந்தது.., என்னுடைய காதல்ல இப்பவும்.., எப்பவும் நான் ரசிக்கிற ஒரு விஷயம். சொல்லமுடியாமல் போகும் காதல்..,கேட்க முடியாத காதலின் ஆயுள்.., ஆயுள் முடியும் வரை இருக்கும் என்று சொல்லி சொல்லுவாங்க.
ஆனா அது அடுத்த துணை.., அடுத்த உறவு கிடைக்கும் வரைக்கும் அப்படியென்று. இப்போ பல புதுமையான விசயங்கள் வந்திடுச்சுங்க. சொல்லப்படாமல் இருக்கும் காதல் வெல்லப்படாமல் இருக்கும் போருக்கு சமன். அடிக்கடி புண்ணாகிகிட்டே இருக்கும்.., ஒரு முடிவே இல்லாம. காலங்கள் கடந்து எப்போதாவது ஒரு நாள் பேரழிவைக்கொடுக்கும்!!!!
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..

இன்று எனது இருநூறாவது ஆக்கத்தில் நான் உங்களை சந்திப்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது ஆக்கங்களை பார்த்து ரசித்து என் ஆக்கத்திற்கு (Comments & Likes) வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை..,
உங்களிடம் இருந்து விடைபெறும்..,
எட்மன் ஜெகதீபன்..

எல்லோருக்கும் இனிய வாழ்க்கை அமையட்டும்


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எங்கு கொண்டு சென்றாய் என் இதயத்தை..??!!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


" உன் வெள்ளை பல் சிரிப்பில் வெளுத்துப்போன என் இதயத்தை எங்கு கொண்டு சென்றாய்??!! இங்கொருவன் தனிமையில் இயலாமையில் இயங்குகிறேன். வந்திறங்கி ஒரு நிமிடம் என்னை ஆறத்தளுவிக்கொள். என் காதல் வேள்வித் தீயை அணைத்துவிட்டுப் போ!!!! "


ஒரு காதல்.., ஒரு கல்யாணம்.., ஒரு வாழ்க்கை.., அமைந்தா எனக்கு அமைஞ்ச மாதிரி அமையனும்க. இன்னைக்கு வரைக்கும் ஒரு சின்ன விசயத்துக்காக கூட நாம பிரிந்து போனதில்லை. ஐயோ நமக்குள்ள சண்டை அது ஏகப்பட்டது.
ஒரு நாளைக்கு ஒரு மூன்று.., நான்கு தடவையாவது நாம சண்டை போட்டுக்கொள்ளுவம். ஆனா எந்த சண்டையுமே ஒரு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல தாண்டி போனதில்லைங்க. அப்புறமா என் முகத்தை என்னால திருப்பி வைச்சுகவும் முடியாது.., அவர் சங்கடபடுறத என்னால பார்க்கவும் முடியாது. அவர் பக்கம் பாத்திங்க எண்டா..!! அவரும் அதே தான். அவராலும் சங்கடப்பட்ட முடியாது என் முகம் பணிந்து இருக்கிறத.., அவராலும் ஏற்று கொள்ள முடியாது.
உங்க எல்லோருக்குமே இந்த மாதிரியான வாழ்க்கை அமைஞ்சா எவ்ளவு சந்தோசமா இருக்குமில..!! எல்லோருக்கும் இனிய வாழ்க்கை அமையட்டும். ஒரு வாரம் காத்திருப்பிற்கு பின் சந்தித்தது போல நாட்கள் வேகமாக நகர்ந்து போக என்றாவது ஒரு நாள் அந்த திங்கள் வேகமாக என்னிடம் வந்து சேரும். அந்த திங்களில் சிந்திப்போம்.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை. உங்களிடமிருந்து விடை பெறும் உங்கள் பிரியசகி!!!!

எழுத்தும் ஆக்கமும்,
எட்மன் ஜெகதீபன்..

Friday, August 3, 2012

என் வாழ்க்கையினுடைய நல்ல பொழுதுகள் எல்லாமே நல்லாவே தெரியுதுங்க

************************************************************************************************
என் வாழ்க்கையும்.., என் இந்த கவிதைகளும் கிட்ட தட்ட ஒன்று தான்க..
************************************************************************************************


பாட்டு கேட்டு.., கேட்டு.., நாட்கள் கடந்து போவதனால் என் வாழ்க்கையினுடைய நல்ல பொழுதுகள் எல்லாமே நல்லாவே தெரியுதுங்க. பாடல்கள் மாதிரி ஒரு அற்புதமான ஒரு விஷயம் இல்லை அப்படி என்கிறதனால.., என் மனசு அப்படியே லேசாகி என் கல்லான எண்ணங்களும் அப்படியே கரைந்து போய்விடுதுங்க.
பாடலின் ஆரம்பத்தில் தொக்கிநிற்கும் என் மனது முடியும் போது ஐயையோ முடிகிறதா என்று பதறுகிறது. மறுபடியும் கேட்க தோன்றுகிறது. ஒரு கவிதை தொகுப்பை வாசித்த போது உணர்ந்தேன்.., கவிதையின் ஆரம்பத்தில் கவிதை எப்படிப்போகப்போகிறது.., எதில் முடியப்போகிறது.., என்று தெரியவில்லை. இரண்டே வரிகளில் முடியும் ஒரு புகைப்படத்தைப் போன்ற கைக்கு கவிதையும் இல்லை. இன்னொரு பெரிய கவிதை. ஆரம்பமே புரியவில்லை. அனால் கண்டிப்பாக அடுத்தடுத்த வரிகளுக்கு தாவித்தான் ஆகவேண்டும் என்று என் மனம் சொல்கிறது. 
பக்கங்கள் புரட்டப்படுகின்றது. ஒரு பக்கம்.., இரண்டு பக்கம்.., மூன்று பக்கம்.., நான்கு பக்கம்.., ஐந்தாவது பக்கத்தில் கவிதை முடிகின்றது. ஏன் வாசித்தோம்..!!?? எதற்காக வாசித்தோம்..!!?? என்றே புரியவில்லை. ஒரு அர்த்தமும் தெரியவில்லை. கவிதை முடிந்து விட்டது. பல நாள் இரவுகள் நான் அந்த கவிதைக்கான அர்த்தம் என்ன என்று என் மனதுக்குள் எங்கெல்லாம் மூலை இருக்கிறதோ..!! அங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தேன். 
அர்த்தம் கிடைக்கவில்லை. முடிவில் ஒரு முடிவை நானாக எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கையும்.., இந்த கவிதையும் கிட்டத்தட்ட ஒன்று தாங்க. இன்னும் இரண்டு என் ஆக்கத்தில் என் கவிதை தொகுப்பு இருநூறை எட்டுகிறது. ஆனா பாருங்க எனக்கு கவிதையை படிக்க ஆரம்பிக்கும் போது.., ஏன் படிக்கிறோம்!!?? எதுக்காக படிக்கிறோம் என்றே தெரியாது. 
ஆனா படிச்சே ஆகணும்.., அடுத்தடுத்த வரிகள் என் வாழ்க்கையில அடுத்தடுத்த நாட்களாக கடந்து கடந்து போய்கிட்டே இருக்கு. திடீரென்று முற்றுப்புள்ளி வருகின்றது. முடியும் தருணத்தில் கவிதையை மீள் சுழன்று பார்க்க கூட நேரம் கிடைப்பதில்லை.  



ஆனால் கவிதையை எல்லோரும் ரசிக்கிறார்கள். வாழ்க்கையை நமக்கு நாமே சகித்துககொள்கிறோம்.
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..

நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும்..

பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்போம் பிரிவுகளை மட்டுமே..,
நினைவுகளை அல்ல!!
நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும்..,
இருட்டில் நடந்தாலும் இமையம் வரை செல்லலாம்!!!!
with love Edmon..

Thursday, August 2, 2012

நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்!!!!

நல்ல இதயங்களை பார்ப்பது கடினம்..,
நல்ல இதயங்களுடன் பேசுவது அதிஸ்டம்..,
நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்!!!!
I'm always lucky from you..
உன் முகம் சிரிப்பதை பார்த்து கைகொடுப்பவர்களை விட..,
உன் உள்ளம் அழுவதை நினைத்து கண்ணீர் துடைப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள்!!!!
with love Edmon..

உன் பதில் எனக்கு விடுதலை தரும் விடுகதை என்று அறிந்தும் எழுதுகிறேன் உனக்கு ஒரு கடிதம்!!!!

என் மன்னவனாய் உன்னை நினைத்து.., என் எண்ணங்களை வண்ணங்களாக்க.., என் கன்னங்கள் சுமக்கும் கண்ணீருடன்.., திண்ணமான முடிவுரை எழுத முகவுரை நீயாக.., உன் பதில் எனக்கு விடுதலை தரும் விடுகதை என்று அறிந்தும் எழுதுகிறேன் உனக்கு ஒரு கடிதம்!!!!
காதல் அனைவரும் அறியும் தேடல்.., அனால்
நீ என்னருகே இருந்தபோது எனக்கு புரியவில்லை. நீயும் இன்று வரை அறியவில்லை உன்னை நான் காதல் கொண்டேன் என்று..,
எல்லோருக்கும் காதல் வரும் தவறில்லை.., எனக்கு காதல் வந்தது.
ஆனால் உன்னை நான் தவறவிட்டேன்..
அன்று நீ என் அருகே.., நீ யாரோவாய்.. 

இன்று என் மடல் உன் அருகே.., நான் யாரோவாய்..
இனி என்றும் நம் நினைவில் நாம் யாரோவாய்..
ஏன் இந்த மடல் இன்று என்று நீ வினவுவது புரிகிறது காதலா!!??
ஏனெனில் நான் உன்னை காதலிக்கின்றேன் என்று நீயும் இன்று தான் அறிவாய்..
உலகமும் இன்று தான் அறியும்..
என்னவனே உனக்காக நான் வரைந்த மடலில் ஏதும் தப்புகள் இருந்தால் எனது முகவரிக்கு நீ பதில் எழுது எனக்கு அது போதும்.., 


உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன் என்றும்!!!!
இப்படிக்கு,
உன் பிரியசகி..

எழுத்தும் ஆக்கமும்..
எட்மன்..

என்னை விட்டு தொலைதூரம் சென்று விட்டாய் நீ.., என் தூக்கத்தை கலைத்து நான் தினமும் இங்கே வாடுகிறேன் உன்னைக்காணமல்!!!!??


**************************************************************************
கனவே.., கனவே.., என் கனவெல்லாம் உன் மேல்..
**************************************************************************
அசுரனே வந்தாலும் அசராது.., என்னை சிறு புன்னகையாலே வெட்டி சாய்த்தாய்..
நீ நடக்கும் வீதியில் தூசியே இருக்காது.., நீ வருவாய் என்று நூறு முறை நான் கடந்து போவதால்..
அன்புக்காதலியே நீ இருக்கும் இடத்தில் வெயில் இருக்காது.., நிழலாய் உன்னை நான் தொடர்ந்து வருவதால்..
நீ தூக்கி எறியும் குப்பை கூட கால் இருக்காது.., என் அறையில் எப்படியோ அது குடி கொள்வதால்..
என் வீட்டு கண்ணாடி பொய் சொல்லுகிறது.., அதில் என்னைக்காணாமல் உன்னை காண்பதால்..

காதலியே உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்.., ஆனால் இன்னும் நான் தூண்டிலைத் தான் காதலிக்கிறேன்..
இப்போது என்னை விட்டு தொலைதூரம் சென்று விட்டாய் நீ..,
 
 
 
என் தூக்கத்தை கலைத்து நான் தினமும் இங்கே வாடுகிறேன் உன்னைக்காணமல்!!!!??
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..