Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Wednesday, August 1, 2012

ஒவ்வொரு இரவும் என் தலையணை நனைஞ்சுது என்னை இன்னமும் நினைச்சிட்டு இருக்கும் என் உள்ளத்தை நினைச்சு

******************************************************************************
அவர் எங்கு இருந்தாலும் சந்தோசமா இருக்கணும்..
******************************************************************************
 
என்னை பெற்றவங்க என்னை வெளிநாட்டுக்கு அனுப்பனும்.., என்னை கட்டிக்கொடுத்தா வெளிநாட்டு மாப்பிளைக்குதான் கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும் என்றதுல உறுதியா இருந்தாங்க. நான் இங்கே ஒரு உள்ளத்தை விரும்பிகிட்டு இருக்கிறன். காதலிச்சிட்டு இருக்கிறன். என் காதல் என் பெற்றவங்கவங்களுக்கு தெரியவர பெரிய போராட்டமே நடந்திச்சு என் வீட்டில்.., யாருமே என் மனசை புருன்சுக்கல. அதுக்கு பிறகு நான் அவரை சந்திச்சன். என் மனகஷ்டத்தை   அவர்கிட்ட சொன்னன். 
என்னிலைமையை  புறுஞ்சிகிட்ட அவர் சொன்னார் நீ உங்க வீட்டில ஆசைப்படுரமாதிரி வெளிநாட்டு மாப்பிளையையே கல்யாணம் பண்ணிகிட்டிஜென்ரா உன் வாழ்க்கை நல்ல இருக்கும். உங்கவீட்டு பொருளாதாரமும் நல்லாகிடும் என்று என்னை சமாதானப்படுத்தி என்னைவிட்டு ஒதுங்கி கொண்டாரு. 
நான் அரை மனதுடனே என்னை பெற்றவங்க அமைச்சு தந்த வாழ்க்கையை எற்றுகிட்டேன். திருமணம் முடிச்சு வெளிநாட்டுக்கு போனேன். அங்கு போன பிறகு தான் என்னோட கணவரின் இன்னொரு வாழ்க்கை பற்றி தெரியவேண்டி வந்திச்சு. மனசுடைஞ்சு போய்ற்றேன். வெளிநாட்டுல இப்படி எனக்கு மட்டும் இல்ல.., நிறையபேருக்கு இப்படி நடந்து இருக்கு என்றத நாம கேள்விப்பட்டு இருக்கிறம். 
அதுக்கு பிறகு என்னோட கணவர் " நீங்க மட்டும் காதலிக்கலையா? ஊர் சுத்தலையா? " இப்படியெல்லாம் என்னோட கடந்த கால கனவு வாழ்க்கையை கொச்சைப்படுத்தி குத்திக்காட்டி தினமும் பேசினாரு. தினமும் அவர் தனது பழைய வாழ்க்கையை நாடி சென்றார். 
நான் என் கள்ளம் கபடம் இல்லாத ஒரு எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத என் உள்ளத்துக்கு பண்ணின துரோகத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் இது. விளைவு நான் திரும்பி வந்திட்டன் விவாகரத்தும் பெற்று இப்போ என்னுடைய நாட்டில் என்னோட ஊரில் நான் இருக்கிறேன்.
நான் விரும்பின உள்ளம் அவர் இன்னும் திருமணம் முடிக்கல. அவர் எங்கட உறவினர் மூலமா சொல்லிவிட்டிருக்கிறார் இப்படி " அவவுக்கு என்னை ஏற்றுக்க சம்மதம் என்றா நான் அவங்களையே கல்யாணம் பண்ணிக்கிறன் " என்று என்னை கேட்டு. 

மனசு வலிச்சுது. ஒவ்வொரு இரவும் என் தலையணை நனைஞ்சுது என்னை இன்னமும் நினைச்சிட்டு இருக்கும் என் உள்ளத்தை நினைச்சு. இதுவரைக்கும் நான் அவர் முகத்தை பார்த்து பேசினதே இல்ல. நான் எந்த முகத்தை வைச்சுகிட்டு அவரை பார்க்க போவேன்!!??  இல்லை.. நான் என்னோட சுயநலத்தால, என்னை பெற்றவங்ககளால தான் கஷ்டப்படுறன். 
நான் விரும்பிய உள்ளம் என்னை கஷ்டப்படுத்தவே இல்லை. அவர் தன் பாட்டில என்னை விட்டு ஒதுக்கின மாதிரி.., நானும் அவரை விட்டு ஒதுங்கி இருக்கவே ஆசைப்படுறன் அவர் என்மேல் வைச்ச உண்மையான நேசத்தை கொச்சைப்படுத்த நான் இனிமேல் விரும்பல. 
அவருடைய வாழ்க்கையில் அவரை பெற்ற உள்ளங்களும், அவருடைய சகோதரர்களும் என்னை ஏற்றுக்கொள்ளுவாங்களா??!! அவருக்கு என்னால எவ்வுளவு பிரச்சினை. எவ்வுளவு தர்மசங்கடங்கள் வரும். காரணம் காட்டி நானே ஒதுங்கி கொள்ளுறன். அவர் எங்கு இருந்தாலும் நல்லா சந்தோசமா இருக்கணும். அது தான் என்னோட உணர்வு. 



 இவ்வுணர்வு உண்மையான காதலில் பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் வரலாம்.
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..

No comments:

Post a Comment