&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
என் காதோரமாய் பயணம் செய்யும் கண்ணீர்த்துளிகளின் யாத்திரை என் இரவுகளை சுவாசம் செய்கிறது
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
என் கூடவே இருந்து என் மனதோடு
விளையாடிச்சென்ற உன் நினைவுகளை மீட்டும் போது என் காதோரமாய் பயணம் செய்யும்
கண்ணீர்த்துளிகளின் யாத்திரை என் இரவுகளை சுவாசம் செய்கிறது. என்னவளே என்
நினைவில் நீ இருந்த போது நீ எனக்கு அனுப்பின கைத்தொலைபேசி குறுஞ்செய்திகளை
உன்னினைவாய் என் கைப்புத்தகத்தில் வரைந்து நாளொருமுறை பார்க்கும் போது என்
கண்ணீர்த்துளிகளால் கரைந்துபோகும் எழுத்துக்கள் என் கனவுகளையும் கரைத்து
போகிறது.
மரித்துப்போன காதலின் சுவடுகளாய் கண்ணீர் என்றும் என் கன்னத்தில்
தரித்து நிக்கிறது காதலி. காதலை கோவிலாக நினைத்தால் இன்று கண்ணீர் ஆறும்
தீர்த்தமாக ஓடுகிறது என் காதலே. என்றுமே உன் சந்தோசத்தை ரசிக்கும் உன்
ரசிகனாய் எட்மன்..
No comments:
Post a Comment