************************************************************************************************
என் வாழ்க்கையும்.., என் இந்த கவிதைகளும் கிட்ட தட்ட ஒன்று தான்க..
************************************************************************************************
பாட்டு கேட்டு.., கேட்டு..,
நாட்கள் கடந்து போவதனால் என் வாழ்க்கையினுடைய நல்ல பொழுதுகள் எல்லாமே
நல்லாவே தெரியுதுங்க. பாடல்கள் மாதிரி ஒரு அற்புதமான ஒரு விஷயம் இல்லை
அப்படி என்கிறதனால.., என் மனசு அப்படியே லேசாகி என் கல்லான எண்ணங்களும்
அப்படியே கரைந்து போய்விடுதுங்க.
பாடலின் ஆரம்பத்தில் தொக்கிநிற்கும் என்
மனது முடியும் போது ஐயையோ முடிகிறதா என்று பதறுகிறது. மறுபடியும் கேட்க
தோன்றுகிறது. ஒரு கவிதை தொகுப்பை வாசித்த போது உணர்ந்தேன்.., கவிதையின்
ஆரம்பத்தில் கவிதை எப்படிப்போகப்போகிறது.., எதில் முடியப்போகிறது.., என்று
தெரியவில்லை. இரண்டே வரிகளில் முடியும் ஒரு புகைப்படத்தைப் போன்ற கைக்கு
கவிதையும் இல்லை. இன்னொரு பெரிய கவிதை. ஆரம்பமே புரியவில்லை. அனால்
கண்டிப்பாக அடுத்தடுத்த வரிகளுக்கு தாவித்தான் ஆகவேண்டும் என்று என் மனம்
சொல்கிறது.
பக்கங்கள் புரட்டப்படுகின்றது. ஒரு பக்கம்.., இரண்டு பக்கம்..,
மூன்று பக்கம்.., நான்கு பக்கம்.., ஐந்தாவது பக்கத்தில் கவிதை முடிகின்றது.
ஏன் வாசித்தோம்..!!?? எதற்காக வாசித்தோம்..!!?? என்றே புரியவில்லை. ஒரு
அர்த்தமும் தெரியவில்லை. கவிதை முடிந்து விட்டது. பல நாள் இரவுகள் நான்
அந்த கவிதைக்கான அர்த்தம் என்ன என்று என் மனதுக்குள் எங்கெல்லாம் மூலை
இருக்கிறதோ..!! அங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தேன்.
அர்த்தம்
கிடைக்கவில்லை. முடிவில் ஒரு முடிவை நானாக எடுத்துக்கொண்டேன். என்
வாழ்க்கையும்.., இந்த கவிதையும் கிட்டத்தட்ட ஒன்று தாங்க. இன்னும் இரண்டு
என் ஆக்கத்தில் என் கவிதை தொகுப்பு இருநூறை எட்டுகிறது. ஆனா பாருங்க எனக்கு
கவிதையை படிக்க ஆரம்பிக்கும் போது.., ஏன் படிக்கிறோம்!!?? எதுக்காக
படிக்கிறோம் என்றே தெரியாது.
ஆனா படிச்சே ஆகணும்.., அடுத்தடுத்த வரிகள் என்
வாழ்க்கையில அடுத்தடுத்த நாட்களாக கடந்து கடந்து போய்கிட்டே இருக்கு.
திடீரென்று முற்றுப்புள்ளி வருகின்றது. முடியும் தருணத்தில் கவிதையை மீள்
சுழன்று பார்க்க கூட நேரம் கிடைப்பதில்லை.
ஆனால் கவிதையை எல்லோரும்
ரசிக்கிறார்கள். வாழ்க்கையை நமக்கு நாமே சகித்துககொள்கிறோம்.
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..
No comments:
Post a Comment