என் மன்னவனாய்
உன்னை நினைத்து.., என் எண்ணங்களை வண்ணங்களாக்க.., என் கன்னங்கள் சுமக்கும்
கண்ணீருடன்.., திண்ணமான முடிவுரை எழுத முகவுரை நீயாக.., உன் பதில் எனக்கு
விடுதலை தரும் விடுகதை என்று அறிந்தும் எழுதுகிறேன் உனக்கு ஒரு கடிதம்!!!!
காதல் அனைவரும் அறியும் தேடல்.., அனால்
நீ என்னருகே இருந்தபோது எனக்கு புரியவில்லை. நீயும் இன்று வரை அறியவில்லை உன்னை நான் காதல் கொண்டேன் என்று..,
எல்லோருக்கும் காதல் வரும் தவறில்லை.., எனக்கு காதல் வந்தது.
ஆனால் உன்னை நான் தவறவிட்டேன்..
அன்று நீ என் அருகே.., நீ யாரோவாய்..
இன்று என் மடல் உன் அருகே.., நான் யாரோவாய்..
இனி என்றும் நம் நினைவில் நாம் யாரோவாய்..
ஏன் இந்த மடல் இன்று என்று நீ வினவுவது புரிகிறது காதலா!!??
ஏனெனில் நான் உன்னை காதலிக்கின்றேன் என்று நீயும் இன்று தான் அறிவாய்..
உலகமும் இன்று தான் அறியும்..
என்னவனே உனக்காக நான் வரைந்த
மடலில் ஏதும் தப்புகள் இருந்தால் எனது முகவரிக்கு நீ பதில் எழுது எனக்கு
அது போதும்..,
உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன் என்றும்!!!!
இப்படிக்கு,
உன் பிரியசகி..
எழுத்தும் ஆக்கமும்..
எட்மன்..
No comments:
Post a Comment