@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ @@@@@@@@@@
இந்த மண் என் கால்தடம் பட்ட மண். இங்க நான் வாழ்ந்து இருக்கிறன். இந்த மண்ணை விட்டு நான் ஏன் போகணும். அவர்களுடைய எதிர்காலம் அதை அவர்கள் பார்த்துக்கட்டும். எங்களுடைய வாழ்க்கை இங்கேயே முடிஞ்சு போகட்டுமே!!!!??

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புலம் பெயர்ந்த இளைஞ்ஞர்கள் வந்து அவங்க அப்பா.., அம்மாவை இங்கே தவிக்க விட்டுட்டு தனியா இருக்கிறாங்களோ!!?? அப்பா..,
அம்மாவை விட்டுடான்களோ!!?? என்ற உணர்வு கூட எனக்கு அடிக்கடி
தோன்றுவதுண்டு. எங்கட இளைஞ்ஞர்கள் அவர்கள் மட்டும் வெளிநாட்டில சந்தோசமா
Settle ஆகிட்டு அவங்க அப்பா.., அம்மாவை விட்டுடான்களோ என்ற மாதிரி..,
அண்மையில் இப்படி நான் சந்தித்த தம்பதிகள் கிட்டத்தட்ட அவங்களுக்கு ஒரு 65
வயசுக்கு மேல இருக்கும்.
மகன்.., மகள் எல்லோருமே ஆஸ்திரேலியாவில் சந்தோசமா
இருக்கிறாங்க.., சந்தோசமா குடியேறி இருக்கிறாங்க. அங்கேயே தங்களுடைய
எதிர்காலத்தை அமைச்சுகிட்டாங்க குடியுரிமையுடன். இன்னமும் நீங்க இங்கேயா
தனிய இருக்க போறிங்க? கடைசிகாலத்தில இரண்டு பெரும் ஒத்தாசையா
ஒருவருக்கொருவர் எவ்வுளவு காலம் இங்கேயே இருக்கப்போறிங்க??
பேசாம உங்க
பையன் கூடவோ.. பொண்ணு கூடவோ போய் settle ஆகிடலாமே!!?? நம்ம வாழ்க்கை எப்படி
வருதோ.., அதே போக்கிலேயே அனுபவிக்கணும் என்றத உங்களை மாதிரி
பெரியவங்ககிட்ட இருந்து தானே கற்று கொண்டன் என்று நான் அவங்களை பார்த்து
சொன்னபோ.., கண்டிப்பா நாங்க போறம்பா.., இங்க எங்களால தனிய இருக்க முடியாது.
கொழும்பிலையும் நாங்க இருக்க போறது இல்லை. கண்டிப்பா நாங்க போகப்போறம்.
உடன நான் எங்க போகப்போறிங்க? எப்ப போகப்போறிங்க? என்ற போ.., மானிப்பாய்
எங்க ஊருக்கு நாங்க போகப்போறம் என்று சொல்லி சொன்னாங்க.
அவங்க சொன்ன ஒரு
விஷயம் என் மனசை ரொம்ப தொட்டுடிச்சுங்க.., ஏதோ ஒரு வேகத்தை நோக்கி
ஓடிப்போய்.., ஏதோ ஒரு நாட்டில போய் வாழ்றதுல எல்லாம் எங்களுக்கு அக்கறை
இல்லை. இது இந்த மண் என் கால்தடம் பட்ட மண். இங்க நான் வாழ்ந்து
இருக்கிறன். இந்த மண்ணை விட்டு நான் ஏன் போகணும். அவர்களுடைய எதிர்காலம்
அதை அவர்கள் பார்த்துக்கட்டும். எங்களுடைய வாழ்க்கை இங்கேயே முடிஞ்சு
போகட்டுமே என்று சொல்லி போய்கிட்டு இருந்தாங்க.
பெரியவங்களோட மனசை படிக்கிறது ரொம்ப கஷ்டமுங்க. ஆனா ஆழ்ந்து .., ஆழமாய் போய் நாம பார்த்தமென்றா இந்த உலகத்திலேயே இல்லாத ஒரு சொர்க்கம் அந்த பெரியவங்களோட மனசுக்குள்ள இருக்கும்.
பெரியவங்களோட மனசை படிக்கிறது ரொம்ப கஷ்டமுங்க. ஆனா ஆழ்ந்து .., ஆழமாய் போய் நாம பார்த்தமென்றா இந்த உலகத்திலேயே இல்லாத ஒரு சொர்க்கம் அந்த பெரியவங்களோட மனசுக்குள்ள இருக்கும்.
No comments:
Post a Comment