>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மரிப்பின் வலியும்.., வேதனையும் அறிந்தவன் நான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஐக்கினியால் கூட அணைக்க
முடியவில்லை எமது நினைவுகளை. அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள்
ஏனடி என் மனதினுள்..!! காவல் கடமை உழைப்பில் வாழ்பவன் தானே.., எப்படி இவன்
எனக்கு மூன்று வேளை சோறு போடுவான்??!! என்று நினைத்தாயோ!!?? ஏ பெண்ணே
நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில் உன்னிடம் சில கேள்விகள்.. எனது
கேள்விக்கான பதில் யாது?
ஓ மறந்து விட்டாயா? சந்தோசமா வாழுறாயா? உன்
கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர் பார்க்கவில்லை. முறிந்து.., பிரிந்து
போகும் காதலே மீண்டும் வந்து விடாதே..!!!! எனது வாழ்வில் இப்பொழுது தான்
மரித்து உயிர்த்து எழுந்திருக்கிறேன். மரிப்பின் வலியும்.., வேதனையும்
அறிந்தவன் நான்.
மீண்டும் ஒரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை எனக்கு என்
உடம்பில் கூட..!! உன்னை மறக்கும் வேளையில் மரணித்து விட வேண்டும் என
எழுதியவனும் நான் தான். உன் நினைவால் நான் சிந்தின கண்ணீர்த்துளிகளை விட
கசக்கி எறிந்த கவிதைகள் தானடி அதிகம்.
அத்தனையும் வரிகள் நிரம்பிய பாரம்
கூடிய கவித்துளிகள் உனக்காக நான் எழுதியவை "என்னை கண்டிப்பா
ஏற்றுக்கொள்ளுவன்" என்று அன்று நீ சொன்ன நம்பிக்கையில். அனால் இன்று
உன்னருகே நான் யாரோவாய்..,
எட்மன்..
No comments:
Post a Comment