>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சொல்லப்படாமல் இருக்கும் காதல் வெல்லப்படாமல் இருக்கும் போருக்கு சமன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சொல்லப்படாமல் இருக்கும் காதல் வெல்லப்படாமல் இருக்கும் போருக்கு சமன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அவ என்ன பேசப்போறனு எனக்குப்புரியல.., அவகிட்ட என்ன பேசிறதுனு எங்கு புரியல. இப்படியே காலங்கள் கடந்து போக.., அந்த காதல் என்ற கோட்டால மட்டும் நாம ஏதோ ஒரு இடத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறமாதிரியே ஒரு உணர்வு. அவளுடைய பின்னணி என்ன? அவளுடைய வாழ்க்கைத்தரம் என்ன? அவ எப்படி வளர்ந்து வந்தா? எதுவுமே தெரியாது எனக்கு..!! என்னுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது அப்படின்னு நினைச்சு பார்க்கவும் முடியாத அளவு அவளுடைய வாழ்க்கையில ஈடுபட நான் ஆரம்பிச்சது தான் என்னோட காதல்ல நான் பண்ணின முதலாவது புத்திசாலித்தனம்.
அவளுக்கு என்னை பிடிச்சிருக்குதா?
இல்லேன்னா அவளுக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்குதா? இல்லை.., யாரையாவது
ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டாளா? இந்த மாதிரியான கேள்விகள் எல்லாமே
கேட்கிறதுக்கு முன்னாலேயே.., என்னுடைய விருப்பு.., வெறுப்புகள் அத்தனையுமே
அவளையே சுத்தி வந்தது.., என்னுடைய காதல்ல இப்பவும்.., எப்பவும் நான்
ரசிக்கிற ஒரு விஷயம். சொல்லமுடியாமல் போகும் காதல்..,கேட்க முடியாத காதலின்
ஆயுள்.., ஆயுள் முடியும் வரை இருக்கும் என்று சொல்லி சொல்லுவாங்க.
ஆனா அது
அடுத்த துணை.., அடுத்த உறவு கிடைக்கும் வரைக்கும் அப்படியென்று. இப்போ பல
புதுமையான விசயங்கள் வந்திடுச்சுங்க. சொல்லப்படாமல் இருக்கும் காதல்
வெல்லப்படாமல் இருக்கும் போருக்கு சமன். அடிக்கடி புண்ணாகிகிட்டே
இருக்கும்.., ஒரு முடிவே இல்லாம. காலங்கள் கடந்து எப்போதாவது ஒரு நாள்
பேரழிவைக்கொடுக்கும்!!!!
எழுத்தும் ஆக்கமும்,
எட்மன்..
இன்று எனது இருநூறாவது ஆக்கத்தில் நான் உங்களை சந்திப்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது ஆக்கங்களை பார்த்து ரசித்து என் ஆக்கத்திற்கு (Comments & Likes) வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை..,
உங்களிடம் இருந்து விடைபெறும்..,
எட்மன் ஜெகதீபன்..

No comments:
Post a Comment