Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Monday, June 17, 2013

நீ இல்லாத வாழ்க்கையை உன் ஞாபகங்கள் அழகாக்குகின்றன!!

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..,

எனக்கும்,
செத்துவிடத் தோன்றியது!!!!
நிலா இல்லாத வானத்தை
நட்சத்திரங்கள்
அழகாக்குகின்றன..,
நீ இல்லாத
வாழ்க்கையை
உன் ஞாபகங்கள்
அழகாக்குகின்றன
!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, June 16, 2013

நீ விரும்பிய இதயத்தை உன்னால் வெறுக்க முடியாது..

நீ விரும்பிய இதயத்தை உன்னால் வெறுக்க முடியாது..,
வெறுக்க முடிந்தால் இன்னொரு இதயத்தை உன்னால் உண்மையாக நேசிக்க முடியாது!!
உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்.., இமைக்கும் நொடிகளில்,
பிரிவு நிகழும் இமைகள் இல்லை - இது 
நம் கண்களின் கற்பனை!!!!
"இன்று எனது கவிதை கிறுக்கல்கள் 300 ஜ தொடுகின்றது. எனது ஆக்கங்களை இணையதளத்திலும், முகநூலிலும் பார்த்த, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நம் வாழ்வில் ஒளிவீசும் நாள் எப்போது வரும்..

உன் மார்பில் நான் சாயும் வரம் கொஞ்சம் வேண்டும்..,
உன் மூச்சில் நான் கொஞ்சம் உயிர் வாழ வேண்டும்!!
உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழும்..,
கீழ் வானிலே ஒளி வீசும் விடி வெள்ளி போல்,
நம் வாழ்வில் ஒளிவீசும் நாள் எப்போது வரும்!!??

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

அந்த நாள் எப்போது வருமென்று ஆவலுடன் இருக்கிறேன் உன்னுடன் வாழ

ரோஜாவே உன் முட்களால் ஏன் என் உணர்வுகளை குத்தி கிழித்தாய்??!!
உன் உயிருக்கு உரமாய் என் உதிரத்தை அல்லவா உனக்கு ஊட்டினேன்!!
என்னுள்ளம் உன் முகம் காண வேண்டுமென்று துடிக்கின்றது - ஆனால் 

அந்த நாள் எப்போது வருமென்று ஆவலுடன் இருக்கிறேன் உன்னுடன் வாழ!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

உன் பிரிவு என் மனதை பாதிக்கின்றது..

நீ பேசுவதெல்லாம் நிஜம் என்று நினைக்கும் என்னிடமா !!?? - நீ 
நிஜமாகவே பேசாமல் இருக்கின்றாய்..,
ஊமையாய் போனது என் காதல்!!
ஒவ்வொரு நொடியும் என்னிதயம் முகம் தெரியாத உன் முகவரியை தேடுகின்றன..,
உன் பிரிவு என் மனதை பாதிக்கின்றது!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Saturday, June 15, 2013

என்றும் உன் நினைவுகளையே உயிர் மூச்சாய் சுவாசித்து கொண்டிருக்கும் ஓர் உயிர்

உன் நினைவுகள் என் நெஞ்சினில் இருக்கும் வரை..,
இந்த பிரிவொன்றும் பெரிதாய் தெரியவில்லை ♥♥♥♥♥♥♥
என் இதயமெனும் புத்தகத்தை புரட்டிப்பார்த்தேன்..,
அதில் கடைசி வரை உன் நினைவுகள் மட்டுமே பதியப்பட்டுள்ளது..,
என்றும் உன் நினைவுகளையே உயிர் மூச்சாய் சுவாசித்து கொண்டிருக்கும் ஓர் உயிர்!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நீ எங்கு சென்றாலும் உன்னுடன் எடுத்து செல் என்னிதயத்தையும்

வேண்டாம் என்று நீ திருப்பி கொடுத்த என் இதயம்..,
எனக்காய் துடிக்கவில்லை ♥♥♥♥♥♥♥
எனக்குள் இருந்து உனக்காய் துடிக்கிறது!!
என்னுச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை என்னை மாற்றி சென்றவளே..,
நீ எங்கு சென்றாலும் உன்னுடன் எடுத்து செல் என்னிதயத்தையும்!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

காலங்கள் அழிந்தாலும் நம் காதல் அழிவதில்லை

உயிரோடு நான் உள்ளவரை..,
உன்னோடு உறவாக நான் வருவேன்..
என் தேகம் தீயில் வேகும் போதும் ஓயாது..,
நான் உன்மேல் கொண்ட மோகம்  ♥♥♥♥♥♥♥
காலங்கள் அழிந்தாலும் நம் காதல் அழிவதில்லை!!!!
என்றும் உன்மேல் நேசமுடன்..,

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

என் மனதை நீ அறிவாயோ !!!???

தண்டவாளத்தில் தலைசாய்ந்து படுத்துறங்கும் ஒற்றை ரோஜா என் காதல்..,
நீ என்னை மீட்க நடந்து வருவாயா ??!! இல்லை ரயிலில் வருவாயா !!??
மடியில் சுமப்பவள் உன் தாய்..,
உன்னை மனதில் சுமக்கிறேன் நான்..,
என் மனதை நீ அறிவாயோ !!!????
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, June 12, 2013

கண்ணீர் சிந்தும் இதயத்திற்கு வலிகளை தாங்க முடியாது

பழகிய இதயம் பிரியும் போது கிடைக்கும் வலியை விட..,
அது காட்டிய அன்பு பொய் என்று தெரியும் போது கிடைக்கும் வலி மரண வலியை விட கொடியது!!
வலிகளை சுமக்கும் இதயத்திற்கு கண்ணீர் சிந்த தெரியாது..,
கண்ணீர் சிந்தும் இதயத்திற்கு வலிகளை தாங்க முடியாது!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்& 

Monday, June 10, 2013

அன்பு காட்டி ஏமாறுவது தவறில்லை.., அன்பு காட்டி ஏமாற்றுவது தான் தவறு!!!!

சிரித்து சிரித்து உன் கன்ன குழிக்குள் என்னை விழ வைத்தாய் ♥ 
துள்ளி திரிந்து என் மனதை தூக்கி கொடுக்க வைத்தாய் 
காதல் பேசாமலே இருந்து நீ என்னை காதலிக்க வைத்தாய் 
அன்பாக பேசி உன் அணைக்கும் தூரத்தில் என்னை வர வைத்தாய் ♥ 
பெண்ணே இப்பொழுது ஏனடி பிரிந்து சென்று விட்டாய் ♥♥♥♥♥♥♥
பிரிவு நீ எனக்கு தந்த வரமா♥ ??!! இல்லை வலியா♥ ??!!
பிரிவு கூட சுகம் தானடி நீ எனக்கு ஆசைப்பட்டு தந்திருந்தால் ♥♥♥♥♥♥♥ 
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நான் உன் கண்களில் இருப்பேன்..

இன்று நீ என்னை பிரிந்தாலும்..
இல்லை மறந்தாலும்..,
என்றாவது நீ என்னை..
நினைக்கும் போது..,
நான் உன் கண்களில் இருப்பேன்..
கண்ணீராக.., 
அன்று நீ உணர்வாய்..
என் பிரிவையும்..,
என் அன்பையும் ♥♥♥♥♥♥♥
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, June 9, 2013

உன்னை என் கண்கள் காணும் முன்பே.., என் கண்ணீர் பார்த்து விடும் ♥♥♥♥♥♥♥

உன் பாதம் பட்டு வாடியது தொட்டா சிணுங்கி..,
இங்கே உன் பார்வை படாமல் வாடி கிடக்குது இந்த முல்லை மொட்டு!!
எப்போதாவது உன்னை பார்க்க சந்தர்ப்பம் கூடினால்..,
உன்னை என் கண்கள் காணும் முன்பே..,
என் கண்ணீர் பார்த்து விடும் ♥♥♥♥♥♥♥

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&  

மரணித்தாலும் மறக்க மாட்டன் உன்னையும் உன் நினைவுகளையும்

உதிர்ந்த ரோஜா இதழ்களை சேர்க்கவும் முடியாது..,
உன்னோடு மலர்ந்த என் அன்பை யாராலும் பிரிக்கவும் முடியாது!!!!
மௌனமாக இருப்பதால் மறந்து விட்டேன் என்று நினைக்காதே..,
மரணித்தாலும் மறக்க மாட்டன் உன்னையும் உன் நினைவுகளையும்!!!!

&அன்புடன் எட்மன் ஜெககதீபன்&