******************************************************************************************
காதலால் கடிதம் எழுதுகிறேன். காதலா நீ என் காவலனா? என்று..
******************************************************************************************
பேசினோம்.., பழகினோம்.., ஒரே
தட்டில் உணவுண்டோம். உண்மையாய் பேசினோம். உறவாய் ஆறுதல் கூறினோம். வாழ்வின்
முயற்சிகளுக்கு வழிகாட்டினோம். துணிகிறோம் நாம் இருவருமே.., ஆனால் தனியே
பார்த்தோம்.., தொட்டதில்லை. இனிமையாய் சந்தித்தோம்.., சஞ்சலப்படவில்லை.
கவிதையாய் கதை பயின்றோம்.., காமம் இருந்ததில்லை. வாழ்த்துக்கூறி வாய்
மொழிந்தோம்.., தூய்மை கெடவில்லை. நான் நினைப்பதும்.., நீ நடப்பதும் ஒன்றே.
காவலா நீ விரும்பியதும்.., நான்
விரும்பியதும் ஒன்றே. நடு நிசியில் தொலைபேசியில் உரையாடியதும் நன்றே.
தப்பான எண்ணங்கள் எதுவுமே இல்லாமல் ஒருவருக்கொருவர் ரசித்தோம். எம் உறவை
பூசித்தோம். இன்றுவரை தொடர்கின்றோம் எம் உறவை. நாம் காதல் சொல்லாத
காதலர்களா? நட்பை கொண்டாடும் நண்பர்களா? உங்களைப்போல் ஒருவர் எனக்கு
காதலனாக இருந்தால் என்றுமே என் காவலனாய் என் வாழ்வில் வரவேண்டும்.
உனக்காக
என்றும் என் காதல் இல்லாத நட்பு.., காதலோடு கூடிய நட்பும் தான். காவலா நீ
எனக்காக மட்டும் தான்.
இப்படிக்கு,
உணர்வுளில் என்றும் உன் ரசிகனாய்,
எட்மன் ஜெகதீபன்..
No comments:
Post a Comment