Joseph Rasanayagam Edmon Jegatheepan

Hi Dear FRIENDS!!

" I warmly welcome you all to my page "

Thanks & Regards,
J.R.Edmon..
May God bless you all!!




Wednesday, November 27, 2013

உனக்கு புரியும் நேசிப்பின் ஆழம்!!

உன்னை நேசிப்பவர்களை வெறுக்க காரணம் தேடாதே..,
அவர்களை நேசிக்க சந்தர்ப்பம் தேடு,
அன்று தான் உனக்கு புரியும் நேசிப்பின் ஆழம்!!
உனக்குள் என் நட்பும்..,
எனக்குள் உன் நட்பும்..,
இருக்கும் வரை நமக்குள் பிரிவு என்பதே இல்லை!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, November 26, 2013

உலகமே உனக்காக மாறும்!!

உனக்காக பிறர் மாற வேண்டும் என நினைக்காதே..,
பிறருக்காக நீ மாறி பார்..
உலகமே உனக்காக மாறும்!!
உனக்கு பிடித்தவை அனைத்தும் எனக்கு தெரியும்..,
என்னை உனக்கு பிடிக்குமா என்பதை தவிர!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நேரம் இருந்தால் நினைத்துப்பார்!!?? நேரில் வரவில்லை என்றாலும் நினைவில் வருவேன் உன் அன்பிற்காக!!!!

உறவாக இருந்தால் என்றோ மறந்திருப்பேன்..,
உயிரோடு அல்லவா??!! கலந்துவிட்டாய்,
எப்படி மறப்பது உன்னை??!!
உன் பாசத்திற்கு ஏங்கிய என் இதயம்..,
இன்று உன் பாசத்தை வெறுக்கிறது,
உன் பொய்யான பாசத்தால் இழந்த என் வாழ்க்கையை எண்ணி!!??

&அன்புடன் எட்மன்&

தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு!!!!

நம் நட்புக்கு முகம் தேவையில்லை..,
முகவரியும் தேவையில்லை,
தொலைவில் இருந்தாலும் உன்னை ஒரு துளி கூட மறப்பதில்லை என் இதயம்!!
இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை நீயும் நானும் பேச..,
இருக்கும் நாட்கள் தான் நமக்கு சொந்தம்..
தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Monday, November 11, 2013

உன் மனதுக்குள் இருக்கும் என் அன்பின் ஆழம் தெரியவில்லையா??!!!!

உன்னை அதிகமாக நேசிப்பவர்களை நோகடித்து விடாதே..,
அவர்களின் மௌனமே உனக்கு தண்டனையாகிவிடும்!!!!
வார்த்தையில் காட்டிய கோவத்தின் ஆழம் தெரிந்த உனக்கு..,
உன் மனதுக்குள் இருக்கும் என் அன்பின் ஆழம் தெரியவில்லையா??!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, November 5, 2013

உண்மையான "பாசம்" என்றுமே நிலையானது


உதிரம் கூட நிறம் மாறலாம்..
உணர்வுகள் கூட சுவை மாறலாம்..
அன்பு கூட பகையாகலாம், ஆனால்..
உண்மையான "பாசம்" என்றுமே நிலையானது!!!!
கையளவு இதயம் இருந்தாலும்..
மலை அளவு இருக்கும் உன் நினைவுகளை சுமக்குறேன் நான்..,
சுமையாக அல்ல.. சுகமாக..!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Thursday, August 15, 2013

உயிரோடு கலந்த என் உறவையும் சரி உன்னோடு கலந்த என் அன்பையும் சரி யாராலும் பிரிக்க முடியாது..

நாம் தேடி தேடி நேசித்த ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் - ஆனால்
நம்மை தேடி தேடி நேசித்தவரை ஒரு நாளும் வெறுக்க முடியாது!!
நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நம்முடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை விட..,
நலமாக இருக்க வேண்டும் என்று ஆசை படுவதே உண்மையான அன்பு!!!!

&அன்புடன் எட்மன்&

கண்ணீர்!!

கன்னம் என்னும் காதிதத்தில் இமைகள் என்னும் தூரிகை கொண்டு வரைந்த சோகச்சித்திரம் தான் கண்ணீர்!!
பிரிந்திரிந்து பிரியம் காட்ட வேண்டாம் - நீ
அருகில் இருந்து சண்டை போடு போதும்..
அது தான் உண்மையான நட்பு!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Friday, July 19, 2013

உண்மையான அன்பு

ஒரு உண்மையான அன்பை எவ்வுளவு வேண்டுமானாலும் காயப்படுத்து - அது உன்னை மறுபடியும் நேசிக்கும்..
ஆனால்..,
ஏமாற்றி விடாதே - அது 
மறுபடியும் யாரையுமே நேசிக்காது!!
பிரிந்து சென்றால் புரிந்து கொள்ள முடியாது..
புரிந்து கொண்டால் பிரிந்து செல்ல முடியாது - அது
தான் உண்மையான அன்பு !!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Wednesday, July 17, 2013

கண்கள் பேச நினைப்பதை.., கண்ணீர் மட்டும் பேசும்!!!!

மனசு பேச நினைப்பதை..,
உதடுகள் பேசிவிடும்..
உதடுகள் பேச மறுப்பதை..,
கண்கள் பேசி விடும்..
கண்கள் பேச நினைப்பதை.., 
கண்ணீர் மட்டும் பேசும்!!!!
&அன்புடன் எட்மன்&

தனியா இருக்கும் வலியை மட்டும் தனியாய் அனுபவிச்சேன்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
"எனக்கான உன் காதல் எப்பொழுதும் உயிரோட்டமாய் இறப்பிலும் இனிமை காணும்..“
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வேணாம் வேணாம் னு நினைக்கலயே
நானும் உன்னை வெறுக்கலையே வெறுக்கலயே 
காணம் காணம் னு நீ தேட காதல் ஒண்ணும் தொலையலயே 
ஒண்ணா இருந்த ஞாபகத்தை நெஞ்சோடு சேர்த்து வைச்சன் 
தனியா இருக்கும் வலியை மட்டும் தனியாய் அனுபவிச்சேன் 
பறவையின் சிறகுகள் பிரிந்தால் தான் வானத்தில் அது பறக்கும் 
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நான் நேசிக்கும் அழகான கவிதை உன் பெயர் ♥♥♥

கவிதைகளை வாசிப்பது மட்டுமல்ல..,
நேசிப்பதும் சுகம் தான்.
நான் நேசிக்கும் அழகான கவிதை உன் பெயர் ♥♥♥ மட்டும் தான்!!
யாரை மறக்க நினைக்கிறாயோ..
அவர்களை தான் தினமும் நினைப்பாய்..,
யாராலும் யாரையும் மறக்க முடியாது நினைவுகள் இருக்கும் வரை!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Tuesday, July 16, 2013

உன்னுடன் வாழ என்றென்றும் நான்.., உனக்காக காத்திருப்பேன்!!!!

கண்ணுக்கு தூரமாக இருந்தாலும்..,
நீ என் நெஞ்சுக்குள் இருக்கிறாய்.
என் நெஞ்சுக்குள் ஆயிரம் சுமைகள் இருந்தாலும்..,
நீ அதில் சுகமாய் வாழ்கின்றாய்.
உன்னுடன் வாழ என்றென்றும் நான்..,
உனக்காக காத்திருப்பேன்!!!!
&அன்புடன் எட்மன்&


நீயே வேண்டும் உறவாக..

பூத்திருக்கும் மலர்களை கூட பறிக்க எனக்கு மனமில்லை..,
காரணம் பிரிவின் வலி எனக்கு தெரியும் என்பதால்!!
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்..,
மீண்டும் ஒரு ஜென்மம் என்றால்..
அதில் நீயே வேண்டும் உறவாக!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நீ இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு..

சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட - நீ 
இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு..
உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!!
உன்னை நினைக்காதவரை நினைத்து, நினைத்து - உன்னை 
நினைப்பவர்களை மறந்து விடாதே!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Monday, July 15, 2013

கண்ணீரோடு திரும்பி பார்க்கிறேன்.. நாம் பழகிய நாட்கள் மீண்டும் வருமா என்று!!!!!??

காலங்கள் கடந்து போகும் நேரத்தில் - நான் 
கண்ணீரோடு திரும்பி பார்க்கிறேன்..
நாம் பழகிய நாட்கள் மீண்டும் வருமா என்று!!!!!??
மரணத்தை நோக்கி நகரும் வாழ்க்கையில் - நம்மை 
வாழ சொல்லி வற்புறுத்துவது காதலும், நட்பும் தான்!!!!
காதலை நேசி..
நட்பை சுவாசி..
&அன்புடன் எட்மன்&

Monday, July 8, 2013

வாழ்ந்தது போதுமென்று முகவரி தராமல் போய்விட்டாயோ!!

~~~~~~~~~~~~~~~~
தேடுகிறேன்!!
~~~~~~~~~~~~~~~~
ஒவ்வொரு வினாவுக்கும்..
ஒவ்வொரு பதிலுக்கும்..
ஒவ்வொரு சிரிப்புக்கும்..
என்னை கவிதை பாட வைத்தவளே..,
வாழ்ந்தது போதுமென்று முகவரி தராமல் போய்விட்டாயோ!!!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்& 

உன் காதலை என்னிடம் சொல்வதற்கு..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கண்ணில்லாத காதல்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒற்றை தரம் கூட வீதி வந்து உன் காதலை சொல்லாத நீ..
நான் கண்கள் மூடியதும் அக்கணமே என் விழியருகே வந்துவிடுகிறாயே..
இப்போது மட்டும் நான் அழையாமலே வரும் நீ என்ன அம்மா, அப்பா அனுமதி கேட்டாயா??!!
அடி கண்ணே காதலுக்கு கண்ணில்லை என்பதாலா நீ என் கண்களை மூடச்சொல்கிறாய்? 
உன் காதலை என்னிடம் சொல்வதற்கு!!!!

&அன்புடன் எட்மன்& 

கொஞ்சம், கொஞ்சமாய் விலகி தொலைதூரம் சென்றதெங்கே..!!??

செல்லக்கதை பேசி - என் 
சின்ன மனசை சிறப்பிடித்தவளே..,
என் கொள்ளை ஆசைகளை கொலை செய்து விட்டு..,
கொஞ்சம், கொஞ்சமாய் விலகி தொலைதூரம் சென்றதெங்கே..!!??

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

உன்னை மறப்பதென்பது எனக்கு இறப்பதற்குச் சமம்..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
சம்மதமா!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மறக்கச்சொல்லி விட்டு - நீ 
மறுகணத்தில் போய்விட்டாலும்..,
உன்னை மறப்பதென்பது எனக்கு இறப்பதற்குச் சமம்..
என் மரணம் உனக்கு சம்மதமா??!!

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்& 

Monday, June 17, 2013

நீ இல்லாத வாழ்க்கையை உன் ஞாபகங்கள் அழகாக்குகின்றன!!

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..,

எனக்கும்,
செத்துவிடத் தோன்றியது!!!!
நிலா இல்லாத வானத்தை
நட்சத்திரங்கள்
அழகாக்குகின்றன..,
நீ இல்லாத
வாழ்க்கையை
உன் ஞாபகங்கள்
அழகாக்குகின்றன
!!!!
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

Sunday, June 16, 2013

நீ விரும்பிய இதயத்தை உன்னால் வெறுக்க முடியாது..

நீ விரும்பிய இதயத்தை உன்னால் வெறுக்க முடியாது..,
வெறுக்க முடிந்தால் இன்னொரு இதயத்தை உன்னால் உண்மையாக நேசிக்க முடியாது!!
உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்.., இமைக்கும் நொடிகளில்,
பிரிவு நிகழும் இமைகள் இல்லை - இது 
நம் கண்களின் கற்பனை!!!!
"இன்று எனது கவிதை கிறுக்கல்கள் 300 ஜ தொடுகின்றது. எனது ஆக்கங்களை இணையதளத்திலும், முகநூலிலும் பார்த்த, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”
&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&

நம் வாழ்வில் ஒளிவீசும் நாள் எப்போது வரும்..

உன் மார்பில் நான் சாயும் வரம் கொஞ்சம் வேண்டும்..,
உன் மூச்சில் நான் கொஞ்சம் உயிர் வாழ வேண்டும்!!
உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழும்..,
கீழ் வானிலே ஒளி வீசும் விடி வெள்ளி போல்,
நம் வாழ்வில் ஒளிவீசும் நாள் எப்போது வரும்!!??

&அன்புடன் எட்மன் ஜெகதீபன்&