**********************************************************************************
என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க வந்த என் தேவதை
**********************************************************************************
அவள் வந்த பின்..
என் வாழ்கையின் ஒவ்வொரு நொடிகளும் சந்தோசமாய்.., எத்தினை சந்தோசமாய்..
அவளோடு சேர்ந்து அந்த கடற்கரையில் நடைபயின்ற பொழுது,
நம் வாழ்க்கைக்கனவுகளைக்கண்டோம்.
எத்தினை எதிர்பார்ப்புக்கள்.., எத்தினை திட்டங்கள்..
அவை எல்லாமே இன்னும் சில நாட்களில் கலைந்து போய்விடுமா??!!
இன்று வரையுடன் அவளும், நானும் இருவரும் ஈருடல் , ஓருயிராய் காதல் செய்தோம்.
ஆனாலும் நமக்குள் ஒரு பிரிவு..
அது காலத்தின் கட்டாயம்..
விதியின் விளையாட்டு..
என்னை விட்டு அவள் செல்லவேண்டிய தருணம் வந்தாயிற்று.
என்னால் தடை போட முடியவில்லை.
அனால் என் உள்ளம் தடுமாறுகின்றது.
அந்த அழகிய காதல் நிலவு என்கரம் கிட்டுமா? என்று தினம், தினம் அழத்தோன்றுகிறது.
அவள் வேலை நிமித்தம் மாற்றலாகி தொலைதூரம் செல்கின்ற தருணம்..
என்ன செய்வது?
காலத்தின் கட்டாயமா?
இல்லாவிட்டால் நம் காதல் கண்டு பொறுக்க முடியாத அந்த விதி செய்கின்ற விளையாட்டா?
காத்திருப்பேன் அவளுக்காக..
அவளும் எனக்காக காத்திருப்பாள்!!!!
அன்புடன் எட்மன்..
No comments:
Post a Comment