************************************************************************
என்னுடைய வாழ்க்கையை தேடி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்
************************************************************************
எல்லாருக்குமே மனசுக்கு
பிடிச்ச ஒரு வாழ்க்கைய வாழுற ஆசை தான் கண்டிப்பா இருக்கும். எனக்கு அது
ரொம்ப அதிகமாகவே இருந்தது. என் சின்ன வயசுல இருந்து நான் என்ன.., என்ன..
எல்லாம் நினைச்சிருப்பனோ..!! அதெல்லாம் கொஞ்சம் காலம் தாமதமானாலும் சரி
கண்டிப்பா கிடைச்சிடும். என்கிட்ட வந்திடும். நிறைய விசயங்கள் அப்படி!! அது
நான் ஆசைப்பட்ட வாழ்க்கைத்துணை வரைக்கும் சரியாக கிடைக்கும் படியாக
நடந்தது.
கிடைச்ச எல்லாமே நிலைச்சு
நிக்குதா!!?? அப்படின்னு சொல்லி பார்த்தா.. என்னால அந்த புதிருக்கு பதில்
சொல்ல முடியவில்லை. " மனசுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கை அமையிறதும்.., அந்த
அமைந்து போன வாழ்க்கை திடீரென்று காணாமல் போவதும்!!?? இவை எல்லாவற்றையும்
நம்ம மனசு ஏற்று கொள்ளனும் " என்கிற தத்துவத்தைஜெல்லாம் நாம புத்தகத்தில
படிக்கலாம். நிஜ வாழ்க்கையில் அது ரொம்ப கொடுமையானது. அதை நான் என் அளவில
ரொம்ப அனுபவிச்சு பாத்திருக்கிறன்.
" சரி நீ நினைச்ச வாழ்க்கை
உனக்கு கிடைச்சிது. யார் செய்த பாவமோ?..,, எந்த காலத்தில செய்த பாவமோ?..,
தெரியல உன்னால சரியா வாழ முடியல. இரண்டு வருசத்தால உன் கணவர் இறந்து
போய்ட்டாரு. அத நினைச்சிட்டு நீ இன்னும் கடைசி மட்டும் இது தான் வாழ்க்கை
என்று தனியாவே இருக்க போறியா!!!?? அப்படி நீ வாழுறதுல உன் வாழ்க்கைக்கு
எந்த வித அர்த்தமும் இல்லையே " அப்படி என்னோட தோழிகள் என்னைபார்த்து
சொல்லும் போது ஆரம்பத்தில எனக்கு அது என் மனசில பெரிசா படல்ல. ஏன் என்றா..?
நான் படிச்சிருக்கிற படிப்பு.., அதயும் தாண்டி என்னோட வாழ்க்கைமுறை
எல்லாவற்றயும் சேர்த்து நான் என்ன ஜோசிச்சன் என்று சொன்ன.. ஒரு பெண்ணால ஏன்
தனிய வாழ முடியாது??!!
எனக்கு இருபத்து ஐந்து வயசாகும்
போது என்னோட கணவர் இறந்து போய்ற்றார். கல்யாணம் ஆகி இரண்டு வருஷம்.
கிட்டத்தட்ட ஒரு எட்டு வருடங்கள் தனிமையிலேயே என்னோட வாழ்க்கைய நான்
கடத்திட்டன். இப்போ என்னவோ தெரியல.., அடிக்கடி என் தனிமை என்னை ரொம்பவே
வாட்டுது. சின்ன குழந்தைகள், அயல் வீட்டு செல்ல குழந்தைகள் கத்தும் போதும்,
என்கூட பேசும் போதும், என்னை தாண்டி போகும் போதும் என் உள்மனம் தினமும்
நொந்து.., நொந்து.., வெந்து.., வெந்து.., நொந்து போகிறது.
" நீ ஏன்
உனக்கொரு இன்னொரு வாழ்க்கையை தேடிக்கொள்ளக்கூடாது??!!" என்ற மாதிரி இருந்த
எல்லாருடைய கருத்துக்களையும் கேட்ட நான் எனக்கான வாழ்க்கையை தேடுறதுக்கு
முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறன். எனக்கான வாழ்க்கைத்துணை யார் என்று
தேடுறதுல முனைப்பாக ஈடுபட்டு கொண்டிருக்கிறன்.
பெண் நண்பர்கள், தோழிகள்
எனக்கு இந்தமாதிரி இருக்கும் போது.., நான் இருக்கும் இந்த நிலைமையை சில ஆண்
நண்பர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களுடைய
நட்பு உடைந்து போகிறது. நமக்கு நாமளே சில கோட்பாடுகளை உருவாக்கி
வைச்சிருக்கிறோம். ஆனா நட்பு உடைஞ்சு போகும் போது என் மனசுக்கு கொஞ்சம்
வேதனையாக இருக்கும்.
வாழ்கையில்
ஒரு பெண் சாதிக்கலாம், வாழலாம் என்பது என்னோட வாழ்க்கயில் வெறும் கனவாய்
போய்ற்றுது. " ஆணும், பெண்ணும் எந்த களங்கமும் இன்றி நட்பாய் வாழலாம் "
என்று சொன்னா அது முடிஞ்சு போகும் போது நட்பு உடைஞ்சு போகிறது. எது
எப்படியோ!!?? என்னுடைய வாழ்க்கையை தேடி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
நன்றி.
எழுத்தும் ஆக்கமும்,
உங்கள் எட்மன்..
No comments:
Post a Comment