^^^^^^^^^^^
நம் புரிதல்
^^^^^^^^^^^
நீ உணவு பரிமாறி..
நான் உண்ண
ஆசை கொள்ளும்
நேரமெல்லாம்..,
உடல் நலம்
குறைந்தவளாய்
நடித்து விடுகிறேன்..
அது தெரிந்தும்..
தெரியாதவனாய்..,
நீயும்
பரிமாறுகிறாய்..
இப்படியாய்
இருக்கிறது
நம் புரிதல்!!!!
No comments:
Post a Comment